வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தினை தடுத்து நிறுத்த முயற்சி- எத்தடை வந்தாலும் தொடர்ந்து போராடுவோம்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்களை யாரும் உதாசீனம் செய்யவோ,அவற்றினை மிகவும் கீழான எண்ணம்கொண்டோ நோக்கவேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

 மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 44வது நாளாகவும் நடைபெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தமது தொழில் உரிமையை உறுதிப்படுத்த மத்திய மாகாண அரசுகள் நடவடிக்கையடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 44வது நாளாகவும் இந்த சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்றுவருகின்றது.

இந்த நிலையில் தமது போராட்டத்தினை தடுத்து நிறுத்துவதற்க சில சதித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் எந்த சதித்திட்டம் தீட்டினாலும் தமது உரிமையினைப்பெற்றுக்கொள்ளும் வரையிலும் தமது போராட்டம் தொடரும் என பட்டதாரிகள் தெரிவித்தனர்.

தமது உரிமையினைக்கேட்டு போராடிவரும் பட்டதாரிகளை நீதிமன்றம் வரையில் இந்த அரசாங்கம் கொண்டுசென்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கினற்னர்.

நல்லாட்சி அரசாங்கம் பிரஜைகள் வீதிகளில் போராட்டங்கள் நடாத்திவருவதை வேடிக்கைபார்ப்பதாகவும் பட்டதாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.