மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய இணைப்பாட விதான செயற்பாட்டிற்கான உபகரனங்கள்

(லியோன்) 

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல்மற்றும்  இணைப்பாட விதான செயற்பாட்டிற்கான உபகரனங்கள் வழங்கும் நிகழ்வு (05) புதன்கிழமை நடைபெற்றது


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு   சமூக ஆர்வாளர்களும் ,ஆலய பரிபாலன சபையினரால் சுமார் 40 ஆயிரம் ரூபா   பெறுமதியான  கற்றல் மற்றும் இணைப்பாட விதான செயற்பாட்டிற்கான  உபகரணங்கள்  பாடசாலைக்கு வழங்கும் நிகழ்வு அதிபர் கே .சிறிதரன் தலைமையில் நடைபெற்றது  

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்  டி .யுவராஜன் ,ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பாடசாலை நலன் விரும்பிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .