மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(லியோன்)

 மட்டக்களப்பு  மட்டிக்களி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  (23) வியாழக்கிழமை  நடைபெற்றது .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு  மட்டிக்களி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலை  அதிபர்  கே .சகஸ்ர ஞாமம்  தலைமையில் பாடசாலை  மண்டபத்தில் இடம்பெற்றது .

கனடா மார்க்கம் தமிழ் சமூகம் பங்களிப்புடன் உதவும் கரங்கள் அனுசரணையில் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள்  வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அதிதியாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் , உதவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர் எம் .செந்தில்நாதன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர்