மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம்

(லியோன்)

மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம்  (30)  வியாழக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.


சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அனுசரணையில் சுகாதாரம் போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தப்பட்ட் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான  மருத்துவ முகாம் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன் தலைமையில் பிரதேச  செயலக மண்டபத்தில் நடைபெற்றது . 

அண்மை காலமாக தொற்றா நோய்கள் காரணமாக  அலுவலக உத்தியோகத்தர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் முகமாக  சுகாதாரம் போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து அலுவலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ  முகாம்களை நடத்தப்பட்டு வருகின்றன .

இதன் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம் இன்று நடத்தப்பட்டதுடன் நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு நோய்களுக்கான சிகிட்சைகளு,ம் வழங்கப்பட்டது .

இந்த மருத்துவ முகாமில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர்  திருமதி . கீர்த்திகா மதனழகன்,குடும்பநல தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .