மட்டக்களப்பு மாநகரசபையி; 25 கிலோமீற்றர் நீளமாக மண் வீதிகள் உள்ளன –மாநகர ஆணையாளர் வி.தவராஜா

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் 25ஆயிரம் கிலோமீற்றர் வீதிகள் மணல் வீதியாக காணப்படுவதாகவும் அனைத்தையும் குறைந்தது கிறவல் வீதியாக மாற்றவேண்டிய தேவையுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் பிற்பகல் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான ஞா.சிறிநேசன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் உட்பட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மண்முனை வடக்கு பிரதேசத்தில் கடந்த ஆண்டு 916 திட்டங்களுக்கு சுமுhர் 84 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் என்.குணநாதன் தெரிவித்தார்.

இதன்போது மண்முனை வடக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் மீளாய்வுசெய்யப்பட்டதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராஜா மட்டக்களப்பு மாநகரசபைக்குள் உள்ள மணல் வீதிகளை கிறவல் வீதியாக மாற்றவேண்டிய தேவையுள்ளதாகவும்.23ஆயிரம் கிலோமீற்றர் வீதிகள் மணல் வீதிகளாகவுள்ளதாகவும் அவற்றில் ஐந்து கிலோமீற்றர் வீதிகளை மட்டுமே தற்போது கிறவல் வீதியாக மாற்றுவதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஏனைய வீதிகளையும் கிறவல் வீதிகளாக மாற்றவேண்டிய தேவையுள்ளதாகவும் அதற்கான நடவடிகைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.