மட்டக்களப்பு நகரில் வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன

 (லியோன்)

மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் உள்ள இரண்டு  வீடுகள் மற்றும் மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோவில் வீதியில் உள்ள வீடு  ஒன்றும் 08.12.2016 வியாழக்கிழமை  இரவு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு  பொலிசார் தெரிவிக்கின்றனர்




மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில்  உள்ள இரண்டு வீடுகள் உடைக்கப்பட்டு அதில் ஒரு வீட்டில் ஒரு  பவுன் தங்க சங்கிலியும்  மற்றும்  414/1 , இலக்கமுடைய வீட்டில் 13 பவுன் தங்க நகைகளும் மற்றும் வீட்டின் உரிமையாளரின் வங்கி கணக்கின்  ATM  காட் கொள்ளையிடப்பட்டு வங்கி இருப்பில் இருந்த 38.000  ஆயிரம் ரூபா பணமும் எடுக்கப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவிக்கின்றனர் .

அதேவேளை நேற்று   இரவு  மட்டக்களப்பு இலக்கம் 34/22   கண்ணகி அம்மன் கோவில் வீதியில் உள்ள வீடு உடைக்கப்பட்டு 2,40,000 ரூபா பெறுமதியான மோட்டார சைக்கிளும்   கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர்

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக  சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றதடவியல் பொறுப்பதிகாரி கே .ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்வருகின்றனர்.


இவ்வாறு கொள்ளையர்களால் உடைக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள்  எவரும் இல்லாத நிலையிலே இந்த வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவிக்கின்றனர்