News Update :
Home » » மாசுபடும் மட்;டக்களப்பு வாவி –தடுத்து நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபருக்கு சிறையில் இருந்து பிள்ளையான் கடிதம்

மாசுபடும் மட்;டக்களப்பு வாவி –தடுத்து நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபருக்கு சிறையில் இருந்து பிள்ளையான் கடிதம்

Penulis : kirishnakumar on Wednesday, December 7, 2016 | 8:10 AM

மட்டக்களப்பு வாவினை மாசுபடுத்தும் வகையில் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி வாவியின் அழகை பேண நடவடிக்கையெடுக்குமாறு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை மாவட்ட அரசாங்க அதிபருக்கு சிறையில் இருந்து கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மீன்பாடிய வாவிகுப்பைத்தொட்டியாக மாறுவதனை அனுமதிக்கமுடியாது சிறையிலிருந்து எழுதும் கடிதம் எனஉதாசீனம் செய்யாது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சி.சந்திரகாந்தன் மட்டக்களப்புஅரசாங்கஅதிபர்,மாநகர சபை ஆணையாளர்,கரையோரவளங்கள் பேணல் திணைக்களத்திற்குஅவசரக்கடிதம் எழுதியுள்ளார்.

மட்டக்களப்புவாவியை தூய்மையாகபாதுகாப்பதன் ஊடாகநோய்த் தொற்றினைத் தடுத்தலும்,வாழ்வாதாரத்தினைமேம்படுத்தலும் எனும் தலைப்பிடப்பட்டுள்ளஅக்கடிதத்தில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

இலங்கையிலுள்ளவாவிகளில் மட்டக்களப்புவாவிமிகவும் முக்கியமானதும் மாவட்டத்திற்குபெருமைசேர்ப்பதுமாகும். சம்மாந்துறையினைதெற்குஎல்லையாகவும் பங்குடாவெளியினை வடக்குஎல்லையாகவும் கொண்டமட்டு. வாவியின் புனிதத்துவத்தினைபறைசாற்றும் வகையில் மங்கைக்கு ஒப்பாகபுகழ்பாடும் சிறப்பியல்பைமட்டக்களப்பைநேசிக்கும் தங்களுக்குநான் தெளிவுபடுத்துவது“கொல்லர் தெருவில் ஊசிவிற்பதற்குஒப்பானதாகிவிடும்” இருப்பினும் ஊடகங்களின் வாயிலாகவும் சிறைச்சாலைக்குவரும் மீனவர்களின் பேச்சுக்கள் ஊடாகவும் நான் அறிந்ததகவல்கள் மிகவும் கவலைக்குரியதாகவுள்ளது.

மட்டக்களப்புமாவட்டமண்ணையும் அதன் மகத்துவத்தையும் பாதுகாத்துஅடுத்தசந்ததிக்குகையளிக்கவேண்டியதார்மீகப் பொறுப்புதங்களுக்கும் எனக்கும்  உள்ளதுஎன்பதனைக் கருத்திற்கொண்டு இந்தக் கடிதத்தினைஎழுதுகின்றேன்.

மீன்மகள் பாடவாவிமகள் ஆடும் பெருமையினை மட்டக்களப்புமாட்டத்திற்கு ஏற்படுத்திக்கொடுத்த வாவிபலபிரதேசங்களினதும் பலகிராமங்களினதும் எல்லைகளைவரையறுப்பதாகவும்திகழ்கின்றது.

இவ் வாவியானதுஆவனிமாத இறுதியில் இயற்கையாக மூடி கார்த்திகை,மார்கழிமாதங்களில் மழைநீரினால் நிரம்பி இயற்கையாகவோஅல்லதுதேவைஏற்படும் போதுஅரசாங்கஅதிபரின் தலைமையில் முடிவெடுத்தோமுகத்துவாரம் வெட்டப்பட்டுமேலதிகநீர் கடலுடன் கலக்கவிடப்படுகின்றது. இந்த இடைப்பட்டகாலப்பகுதியில் கடல் நீர் ஆற்றுடன் கலப்பதுகிடையாது.

குறிப்பாக இக்காலப்பகுதியில் இவ் வாவியானதுபெரும் குளமாகவேகாணப்படுகின்றது. இந்நிலையில்  குப்பைகள் ஆற்றங்கரையில் கொட்டப்படுவதால் ஆறு பாரியமாசுபடுத்தலுக்கு உள்ளாகின்றது.

குறிப்பாககாத்தான்குடிநகரசபைஆற்றில் குப்பைகொட்டுவது அனைவருக்கும் தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட விடயமாகிவிட்டது. அதேபோன்றுஉறுதிப்படுத்தப்படாதசில இடங்களில் குப்பைகொட்டுவதுநடைபெறுகின்றன.

மேலும்,மட்டக்களப்புசிறைச்சாலை,வைத்தியசாலைமலக்கழிவுகள் உரியகழிவகற்றல் முறைபின்பற்றப்படாமல் அப்படியேஆற்றில் விடப்படுகின்றது. அதேசமயம் பலநகரப்பகுதிவீட்டு உரிமையாளர்களும் இவ்வாறானசெயற்பாடுகளில் ஈடுபடுகின்றர்.
(உதாரணமாகமட்டக்களப்புபேரூந்துதரிப்புநிலையத்திற்குமுன்பாகவும்,தனியார் பேரூந்துநிலையத்திற்குமுன்பாகவும் இச் செயற்பாடுகளைஅதிகம் காணக்கூடியதாகவுள்ளது) அத்துடன் மட்டக்களப்புபோதனாவைத்தியசாலைவைத்தியகழிவுகளைஎரிப்பதும் மனிதஉடலில் இருந்துஅகற்றப்படும் கழிவுகளைபுதைப்பதும் நடைபெறுகின்றது.

ஆனால் மட்டக்களப்பிலுள்ளசிலதனியார் வைத்தியசாலைகளில் இந்நடைமுறைசீராகபின்பற்றப்படுவதுஅரிதாகவேகாணப்படுகின்றது. பெரும்பாலும் சத்திரசிகிச்சைஊடாகவும் குழந்தைபேற்றுஊடாகவும் அகற்றப்படும் கழிவுகள்,மனிதஉடல் பாகங்கள் ஆற்றின் ஓரங்களில் புதைக்கப்படுவதும் ஆற்றிலேவிடப்படுவதும்,தொழிலாளிசெலவைமீதப்படுத்துவதுஎன்பதுநடைபெற்றுவருகின்றது.

மட்டு. மாநகர சபை உரியமுறையில் ஆடு,மாடு,பன்றி,கோழிவெட்டுவதற்குஅனுமதிவழங்கிஒழுங்குபடுத்தியுள்ளபோதும் ஏராவூர், காத்தான்குடி, களுவாஞ்சிகுடி,போன்றபகுதிகளில் இறைச்சிகழிவுகளும் பெரும்பாலும் இவ்வாறுகொட்டப்படுகின்றது.

இன்றுமீன் மகள் பாடியவாவிஒர் கழிவுத் தொட்டியாகமாறிவருகின்றது இதனைமக்கள் அறிந்தால் மீன் உண்ணமாட்டார்கள்,மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
பலநாடுகளில் இருந்தும் சிலஅபிவிருத்திபணிகள் முனனெடுக்கப்பட்டாலும் மக்களுக்கானதெளிவூட்டல், 2017,2018ம் ஆண்டுகளுக்கான திட்டமிடலில் ஆற்றங்கரைகுப்பைகளை அகற்றுதல்,ஆற்றில் குப்பைகொட்டப்படுவதனைதடுத்தல்,அதிலும் குறிப்பாகவைத்தியசாலையின் கழிவுகளைஆற்றில் விடாமல் தடுத்தல்,மாநகர சபை கழிவகற்றலில் நவீன முறைகளைபயன்படுத்துதல், இறைச்சிகழிவுகளைஆற்றில் கொட்டுதலைத் தடுத்தல், சட்டநடவடிக்கைஎடுத்தல், போன்ற உடனடி தற்காலிகநடவடிக்கையும் நீண்ட காலதிட்டமிடலினுடாக மட்டு. வாவியினை பாதுகாப்பதற்காக ஒருமித்த செயற்பாட்டினுடாகமேற்படிதிட்டங்களைநடைமுறைப்படுத்துவதுகாலத்தின் கட்டாயதேவையாகும்.

அத்தோடுகாத்தான்குடிப் பிரதேசகுப்பைகளைஆற்றில் கொட்டுவதற்குஅனுமதிப்பதினால் மீன் வளம் அழிவதுடன்  மீனவர்களின் பொருளாதாரம் பாதிக்கப்டுகின்றது. அத்துடன் பாரிய நோய் தொற்றும்,சமூகமுரண்பாடும் ஏற்படுகின்றது.முகத்துவாரம் வெட்டப்படகுப்பைகடலில் சென்று கடல் மாசடைதல்,குப்பை கடல் ஓரங்களில் தேங்கி கடல் ஓரம் அழகு இல்லாமல் போதல்,மீனவவலைகளைகுப்பை கூழங்கள் சேதப்படுதல் போன்றதாக்கமும் ஏற்படுகின்றது.
எனவேசிறைச்சாலையில் இருந்துநான் எழுதும் கடிதம் என இதனைஉதாசினம் செய்யாமல் மேற்படிவிடயங்களைகருத்திற் கொண்டுஉரியநடவடிக்கைகளைமேற்கொள்வதற்குஆவனைசெய்யுமாறுகேட்டுக்கொள்கின்றேன்.எனக்குறிப்பிட்டுள்ளார்

Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger