நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான மட்டக்களப்பு கள நிலவரம் என்ன? (முழு விபரம் உள்ளே)

(சசி துறையூர்) 

கெளரவ பிரதமரின் கொள்கை திட்டமிடல் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டல் சிந்தனையின் கீழ் தேசிய இளைஞர்  சேவைகள் மன்றம் இளம் அரசியல் தலைமைத்துவம், நாகரீகமான அரசியல் கலாச்சாரத்தை இளைஞர்களிடத்தே வளர்க்கும் முகமாக முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டம் இளைஞர் பாராளுமன்றம்.

அந்தவகையில் மட்டக்களப்பில்  நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ளது.

கடந்த 02.12.2016 வெள்ளிக்கிழமை வேட்பு மனுத்தாக்கள் நிறைவு பெற்றுள்ளது. மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலக  ரீதீயாகவும்
57 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவற்றில் 12 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு
45 வேட்பாளர்கள்  தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளனர்.

 #01. பட்டிருப்பு தேர்தல் தொகுதி.
மொத்த வேட்பாளர் எண்ணிக்கை 11

01.மண்முணை தென் எருவில் பற்று.(களுவாஞ்சிகுடி)
வேட்பாளர் எண்ணிக்கை -04

01.பாக்கியராஜா அருன்ராசா
02.குணரெட்ணம் துசாந்தன்
03.தேவராசா துவாரகா
04.பத்மநாதன் மதனராஜ்

02. போரதீவுப்பற்று (வெல்லாவெளி)
வேட்பாளர் எண்ணிக்கை -04

01.பு.தவராசா
02.ப.வனுஜா
03.ஆ.ஜெயகாந்தன்
04.த.சுதாகினி

03.மண்முணை தென் மேற்கு (பட்டிப்பளை)
வேட்பாளர் எண்ணிக்கை -03

01.கு.ரவிசேகர்
02.அ.கேகேஸ்வரன்
03.ப.ஜெயக்குமரன்

#02. மட்டக்களப்பு தேர்தல் தொகுதி.
மொத்த வேட்பாளர் எண்ணிக்கை - 14


01.மண்முணை வடக்கு( மட்டக்களப்பு)
வேட்பாளர் எண்ணிக்கை -02

01.நோயனில் இக்னேசியா
      மரியதாஸ்.
02.சுத்தானந்தராஜா ஸஜித்


 02.காத்தான் குடி.
வேட்பாளர் எண்ணிக்கை -03
01.முஹமட் றிப்கி
02.முஹமட் சிஹாப்
03. முகமட் சப்வான்

03.மண்முணை மேற்கு. (வவுணதீவு)
வேட்பாளர் எண்ணிக்கை -04
01.அ.தர்சிக்கா
02.வா.றிசாந்தன்
03.ச.ஜானுதா
04.யோ.சூரியகுமார்

04.மண்முனை பற்று (ஆரையம்பதி)
வேட்பாளர் எண்ணிக்கை -03
01.சி.ரணீஸ்காந்
02.முஹமட் அஸ்லம்
03.பா.ஜெயக்குமார்

05.ஏறாவூர் நகர்.
வேட்பாளர் எண்ணிக்கை -02
01.முகம்மது சாஜித்.
02.முஹம்மது அஸ்லம்.

#03.கல்குடா தேர்தல் தொகுதி.
மொத்த வேட்பாளர் எண்ணிக்கை -20

01.ஏறாவூர் பற்று (செங்கலடி)
வேட்பாளர் எண்ணிக்கை -03

01.மா.நிலக்சன்
02.ம.தர்சன்
03.ம.சுரேஸ்காந்தன்

02.கோறளைப் பற்று.(வாழைச்சேனை)
வேட்பாளர் எண்ணிக்கை - 01
01.அ.வினோத்.

03.கோறளைப் பற்று தெற்கு.(கிரான்)
வேட்பாளர் எண்ணிக்கை -03
01.வி.வினித்தா
02.கு.கமல்ராஜ்
03.அ.அருள்சீலன்.


04.கோறளைப் பற்று மத்தி(வாழைச்சேனை)
வேட்பாளர் எண்ணிக்கை -04
01.ஆர்.ஹஸ்மீர்
02.ஜே.முஹமட் திபாஸ்
03.கே.எல்.எம்.ஹிராஸ்
04.ஜெ.முஹமட் பஸ்லூன்


05.கோறளைப் பற்று மேற்கு (ஒட்டமாவடி)
வேட்பாளர் எண்ணிக்கை -04
01.மு.அ.மு.சியாம்
02.கா.மு.மு.சப்ரி
03.மு.ஜ.அலமுல் ஹிதா
04.ற.ஸாஜஹாத்
06.கோறளைப் பற்று வடக்கு (வாகரை) 
வேட்பாளர் எண்ணிக்கை -05
01.என்.வருணசாந்
02.எஸ்.கேதீஸ்வரன்
03.கே.சுபாசினி
04.எஸ்.டன்சன்
05.கே.சன்சித்

 தற்போது தேர்தலுக்கான பிரச்சார வேலைகளில் முனைப்பு காட்டத் தொடங்கியுள்ளனர் வேட்பாளர்களும் அவர்கள் சார்ந்த குழுக்களும்.

 நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் எமது மாவட்டத்தில்  எட்டு பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை விசேடமாக குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் இம் முறை தேர்தல் தொகுதி வாரியகவே நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  

இளைஞர் பாராளுமன்ற வரலாற்றில் முதலாவது இரண்டாவது தேர்தல் பிரதேச ரீதியாகவும், மூன்றாவது தேர்தல் தொகுதி வாரியாகவுமே இடம் பெற்றன.

  மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் தொகுதிகளும் பிரதேச செயலாளர் பிரிவுகளும்  பிரிக்கப்பட்டுள்ள விதம், மற்றும் இம் முறை இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர் எண்ணிக்கை விபரம்.   (படம்)



ஒரு வருட ஆயுள் காலம் கொண்ட இளைஞர் பாராளுமன்றத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்னர் என்பதும் அதற்க்கான வாக்கெடுப்பு டிசம்பர் 18ம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.