புலிகள் மட்டும்தான் மாவீரர்கள் என்பது பொருத்தமற்ற கருத்து –கிழக்கு மாகாணசபை உறுப்பினர் வெள்ளிமலையின் கண்டுபிடிப்பு

புலிகள் மட்டும்தான் மாவீரர்கள் என்பது பொருத்தமற்ற கருத்து என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை(வெள்ளிமைல)தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவீரர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்த மாவீரர் தின நிகழ்வுகள் அரசாங்கமோ வேறு எவருமோ நினைப்பதுபோன்று புலிகள் மட்டும்தான் மாவீரர்கள் என்பது பொருத்தமற்ற கருத்து.
இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட,இனத்தின் விடுதலைக்காக தன்னுயிரை தியாகம் பண்ணிய அனைவரும் நினைவுகூரவேண்டியவர்களாக நான் கருதுகின்றேன்.

பல பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிர்கள் கூட பறிக்கப்பட்டுள்ளது. ரவிராஜ், அமிர்தலிங்கம் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்களின் விடுதலைக்காக உயிர்நீர்த்துள்ளனர்.எத்தனையோ இலட்சம் பொதுமக்களும் இந்த யுத்தத்தினால் உயிர்நீர்த்துள்ளனர்.

அந்தவகையில் அரசாங்கம் நினைப்பதோ.வேறுயாரும் நினைப்பதோ தமிழ் இனத்திற்காக போராடியவர்களையோ நினைவுகூருகின்றோமே தவிர இந்த நாட்டிலே வாழுகின்ற ஏனைய இனத்தவர்களின் உரிமையினை கேட்கவில்லை.
இந்த நாட்டை நாங்கள் ஆண்ட பரம்பரையினர்.இழந்த உரிமையினையே கேட்டு போராடினார்கள்.அதன்பால் உயிர்நீர்த்தவர்கள் அனைவரையும் இன்று நாங்கள் நினைவுகூருகின்றோம்.