மட்டக்களப்பு மகாஜன கல்லூரி அதிபரின் பிரியாவிடையும் அதிபருக்கான கௌரவிப்பு நிகழ்வும்

(லியோன்)

ஒய்வு பெற்று செல்லும் மட்டக்களப்பு மகாஜன கல்லூரி அதிபரின் பிரியாவிடையும் அதிபருக்கான கௌரவிப்பு நிகழ்வும் இன்று மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் நடைபெற்றது .
    

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் சுமார் 40வருடங்கள் தமது கல்வி கற்பித்தல்  பணியினை மேற்கொண்டு அதில் 12 வருடங்கள் ஆசிரியராகவும் 28 வருடங்கள் அதிபராகவும் தமது பணியினை தொடர்ந்த அதிபர் திருமதி  நேசலட்சிமி துரைராஜசிங்கம் கடந்த 04.11.2016 ஆம் திகதியுடன் தமது பணியில் இருந்து  ஓய்வுநிலை அடைந்துள்ளார் .  

கடந்த 2013 ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை  நான்கு வருடங்களாக மகாஜன கல்லூரியில் அதிபராக சேவையாற்றி  தமது மாணவர்களின்  எதிர்கால சவால்களுக்கு வெற்றிகரமாக முகம்கொடுக்கத் தேவையான நிபுணத்துவம் மிக்க பரிபூரண  நற்பிரஜைகளாக சமூகத்திடம் கையளிக்க சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியுள்ளார் .

இந்த கல்லூரியை வெற்றிகரமாக வழிநடத்தி அர்பணிப்பு மிக்க  சேவைக்காக  பிரதிபா பிரபா விருதினையும் பெற்று  ஒய்வு பெற்று செல்லும்  அதிபர் திருமதி  நேசலட்சிமி துரைராஜசிங்கம் அதிபரின் பிரியாவிடையும் , கௌரவிப்பும் கல்லூரி ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் கல்லூரி நலன்புரி சங்கம் ஏற்பாட்டில்  கல்லூரியில் மிக சிறப்பாக நடைபெற்றது .


தற்போதைய கல்லூரி  அதிபர் கே .அருமைராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம் .நீலாகரன் மற்றும் கல்லூரி உதவி  அதிபர்கள்  ,ஆசிரியர்கள் ,கல்விச்சரா ஊழியர்கள் , கல்லூரி மாணவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் ஒய்வு பெற்று செல்லும்  அதிபர் தனது 60வது பிறந்த தின நிகழ்வையும் ஆசிரியர்கள் ,மாணவர்களுடன் இணைத்து கொண்டாடியதுடன்  கோட்டமட்டத்தில் நடைபெற்ற ஆங்கில தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது .