சித்திரம் மனவளத்தை ,கற்பனையை ,படைப்பாற்றலை வெளிபடுத்துகின்ற முக்கியமான பாடமாகும்

(லியோன்)

ஓவியம் பாடம் கற்பது  அழகியல் சார்ந்த விடயமாகும் இதனூடாக தமது மனவளத்தை ,கற்பனையை ,படைப்பாற்றலை , சிந்தனை ஆற்றலை , மனதை நல்வழி படுத்தி விருப்பங்களை வெளிபடுத்துகின்ற முக்கியமான பாடமாகும் என மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தெரிவித்தார்


சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு  மாணவர்களுக்கான அரச சிறுவர் சித்திர விழா இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அதிகார சபையினால்  சர்வதேச சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான அரச சித்திர போட்டி விழா மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில்  நடைபெற்றது .   

இந்த சித்திரப்  போட்டியானது மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்டது .

இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன் , போட்டியில் பங்கு பற்றிய அனைத்து  மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் உரை ஆற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார் .

இன்றைய சூழ்நிலையில்   சித்திரப்பாட ஆசிரியர்கள் சித்திர  பாடத்தில் கூடிய அக்கறை செலுத்தாமல் விடுவதும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சாதாரண தரத்தில் குறைந்த பெறுபேறுகளை பெற்று விடுவார்கள் என்கின்ற சூழ்நிலையிலே இந்த சித்திர பாடத்தினை கற்பதற்கு விடுவதில்லை .

இதன் காரணமாக இந்த ஓவிய துறையினை கற்பதற்கு பிற பிரதேசங்களில் இருந்து இங்கு வந்து கற்க கூடிய சூழ் நிலை உருவாக்கி கொண்டு வருகின்றது .
ஆகவே ஆசிரியர்களும்  ,பெற்றோர்களும்  பிள்ளைகளை ஓவிய பாடத்திலும் கவணம் செலுத்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் .

இந்த ஓவியம் பாடம் கற்பது என்பது அழகியல் சார்ந்த விடயமாகும் இதனூடாக தமது மனவளத்தை ,கற்பனையை ,படைப்பாற்றலை , சிந்தனை ஆற்றலை , மனதை நல்வழி படுத்தி விருப்பங்களை வெளிபடுத்துகின்ற முக்கியமான பாடமாகும் .

எனவே மாணவர்கள் இந்த சித்திர பாடத்திலும் கவணம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார் .



மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் ,  மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அதிகாரசபை உறுப்பினர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்துகொண்டனர் .