மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வு

உலகளாவிய ரீதியில் உள்ள இந்து ஆலயங்களில் நேற்று மாலை கந்த ஸஷ்டி விரத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த சூரசம்ஹார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.


சூரபத்மன் என்னும் அரக்கனை அழித்து தர்மத்தினை நிலைநாட்டியதை குறிக்கும் வகையில் கந்த சஸ்டி விரதம் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

கடந்த 31ஆம் திகதி ஆரம்பித்த கந்த ஸஷ்டியானது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறவுள்ள கும்பம் சொறிதல் நிகழ்வுடன் நிறைவுபெறவுள்ளது.

கந்த ஸஷ்டி விரத்தின் மிக முக்கியத்துவமான நிகழ்வான சூரம்சம்ஹாரத்தினை முன்னிடடு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இம்முறை சூரம்சம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இன்று விசேட பூஜைகள் நடைபெற்று முருகன்பெருமான் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு சூரசம்ஹார நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.