மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியின் விளையாட்டுத்துறையை மேம்படுத்த நடவடிக்கை

இலங்கையின் முதல் பாடசாலை என்ற பெருமையினைக்கொண்டுள்ள மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் விளையாட்டுத்துறையினை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின்  பழைய மாணவர்கள் மற்றும் கல்லூரியின் சென்றலைட் விளையாட்டுக்கழகம் என்பன இந்த பணியை முன்னெடுத்துவருகின்றது.

விளையாட்டுத்துறையின் அபிவிருத்தியை நோக்காக கொண்டு உடற்பயிற்சி கூடம் திறந்துவைக்கப்பட்டுள்ளதுடன் விளையாட்டு உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இது தொடர்பான நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள பாடசாலையின் அதிபர் தங்குமிட விடுதியில் நடைபெற்றது.

மெதடிஸ்த மத்தியகல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பழைய மாணவருமான பொறியியலாளர் கோபிநாத் உட்பட பழைய மாணவர்களினால் பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் பழைய மாணவர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள உடற்பயிற்ச கூடம் மற்றும் கடினபந்து கிரிக்கட் பயிற்சி பகுதி என்பன திறந்துவைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மட்ட விளையாட்டுத்துறையில் கிழக்கு மாகாணத்தில் கடினபந்து விளையாட்டுத்துறையில் தனக்கென ஒரு இடத்தினைக்கொண்டுள்ள மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் விளையாட்டு துறையை மேலும் விருத்திசெய்யும் வகையில் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது மத்தியகல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் பழைய மாணவருமான பொறியியலாளர் கோபிநாதினால்  வழங்கப்பட்டுள்ள சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் பயிற்சியாளர்களுக்கு பயிற்சிஅ ங்கியும் அறிமுகம்செய்துவைக்கப்பட்டது.

மெதடிஸ்த மத்தியகல்லூரியின் அதிபர் பி.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் என்.பி.ரஞ்சன்,சபiயின் உபதலைவரும் மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினருமான ரி.கிரிதராஜா,பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.