புன்னைச்சோலை பொதுமக்களுக்கான இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

(லியோன்)

மட்டக்களப்பு புன்னைச்சோலை பகுதியில் ஆயுர்வேத இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது .


இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 150வது வருட நிறைவினை சிறப்பிக்கும் வகையில் இலங்கை பொலிஸ்மா அதிபரின் சிந்தனைக்கு அமைவாக  நாடளாவிய ரீதியில் சமூக பணிகள்   முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு அமைய   மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட புன்னைச்சோலை பகுதியில்  ஒரு மாதத்திற்கான நடமாடும் சமூக சேவைக்காக   காவல் அரண்  அமைக்கப்பட்டு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இதன்கீழ்  இப்பகுதி பொதுமக்களுக்கும் மற்றும் பாடசாலை சிறார்களுக்கான இலவச  ஆயுர்வேத மருத்துவ பரிசோதனைகளும் சிகிச்சைகளும் இன்று  வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெட்டிஹாரச்சி தலைமையில் சமூக தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி எஸ் .ஐ . முனசிங்கவின்  ஒழுங்கமைப்பில் நடைபெற்ற  ஆயுர்வேத மருத்துவ முகாமில் அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  தினேஷ்  கருணாநாயக  கலந்துகொண்டார்.


நடைபெற்ற மருத்துவ முகாமில் வைத்தியர்களாக கல்லடி ஆயுர்வேத மத்திய மருந்தக  வைத்தியர் டி .அருணன் , வைத்தியர் திருமதி  .எஸ் . குகேந்தனி, ,  மருந்தக மருந்தாளர் , மருந்தக உதவியாளர் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,பாடசாலை மாணவர்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்    .