கிழக்கு மாகாணத்துக்கான இளைஞர் கொள்கை தயாரிப்பதற்கான செயலமர்வு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


(சசி துறையூர்) ஜக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் அனுசரணை மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹேட்டலில் இந்த நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வில் கெளரவ கிழக்கு மாகாண சபை முதலைமைச்சர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மற்றும் ஜக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதிகள், கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் உட்பட கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பல முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த வேலைத்திட்டமானது இரண்டு நாள் செயலமர்வாக கிழக்கு மாகாணத்துக்கான இளைஞர் கொள்கை தயாரிப்பதற்க்கான செயலமர்வாகும்.

கிழக்கு மாகாணத்துக்கான தனியான இளைஞர் கொள்கை தயாரிப்பதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உத்தியோகஸ்தர்கள், இளைஞர் கழங்களை சேர்ந்த பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என இளைஞர் அபிவிருத்தியோடு சம்மந்தப்பட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.