மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய ஆரம்பப்பிரிவு கற்றல் வளத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(லியோன்)


மட்டக்களப்பு   மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள  ஆரம்பப்பிரிவு கற்றல் வளத்திற்கான  அடிக்கல் நாட்டும்  நிகழ்வு  இன்று  நடைபெற்றது .


 நாட்டை  அறிவின்  கேந்திரமாக  அபிவிருத்தி  செய்யும்  நோக்காக கொண்டு  1000  இடைநிலைப்   பாடசாலைகளையும்  5000  ஆரம்பப் பாடசாலைகளையும் அபிவிருத்தி  செய்யும்   தேசிய  வேலைத்திட்டத்திற்கு அமைவாக  தெரிவு  செய்யப்பட   1000  பாடசாலைகளை  மீளமைக்கும் தேசிய  நிகழ்ச்சித் திட்டத்தின்  கீழ்   அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை செயல் திட்டத்தின் கல்வி  அமைச்சின்  நிதி  ஒதுக்கீட்டின்   ஆரம்பப்பிரிவு கற்றல்வளங்களுக்காக  கட்டிடங்கள்   நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது .

இதன்  கீழ்   மட்டக்களப்பு  கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில்  ஆரம்பப்பிரிவு கற்றல்வளங்களுக்கான  கட்டிடத்திற்கான   அடிக்கல்  நாட்டும்  நிகழ்வு பாடசாலை அதிபர்   கே .சிறிதரன்   தலைமையில்  இன்று பாடசாலை வளாகத்தில்   நடைபெற்றது . .

இந்நிகழ்வில்  கிழக்குமாகாண சபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா ,  கிழக்குமாகாண சபை உறுப்பினர்  இரா .துரைரட்ணம்,   ,  மட்டக்களப்பு  வலயக்கல்விப் பணிப்பாளர் கே . பாஸ்கரன்  ,வலயக்கல்வித் திணைக்கள பொறியியலாளர் எ .எம் .எம் . ஹக்கீம் , ஏறாவூர் பற்று வேல்ட்விசன் முகாமையாளர்  ஜி .எ . சுரேஷ்  மற்றும்   பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி  குழு உறுப்பினர்கள்  பெற்றோர்கள் , பாடசாலை பழைய மாணவர்கள் ,   நலன் விரும்பிகள் , பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் , கல்வி சாரா ஊழியர்கள் என    பலர்  கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது இப்பாடசாலை பலவழிகளிலும் உதவிகள்  செய்த கிழக்குமாகாண சபை உறுப்பினரகளை கௌரவிக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது