கழிவுகளை தரம் பிரிக்கும் தேசிய வேலைத்திட்டம்

(லியோன்)

கழிவுகளை தரம் பிரிக்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று மட்டக்களப்பு மாநகர சபையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது
 

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தலின்படி  இலங்கையில் உள்ள அனைத்து மாநகர சபைகளிலும் கழிவு சேகரிப்பு சேவை தொடர்பில் புதிய ஒழுங்குகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன .

இதன் கீழ்  நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் வீடுகளில் உள்ள  கழிவுகளை நான்கு வகைகளில்  தரம்பிரித்து மாநகர சபையினால்   சேகரிக்கும்  பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன  

இதில் உக்கக் கூடிய கழிவுகள் , பிளாஸ்ரிக் பொருட்கள் , காட்போட் பொருட்கள் , கண்ணாடி பொருட்கள் போன்ற நான்கு வகைகளில் கழிவுகளை  தரம்பிரித்து சேகரிக்கப்படவுள்ளன . 

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட யுனப்ஸ் நிறுவனம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை இணைந்து மேற்கொள்ளப்படுகின்ற இந்த திட்டத்தின் ஆரம்ப  நிகழ்வு  மட்டக்களப்பு  மாவட்ட அரச கட்டிட ஒப்பந்தகாரர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார் தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது .


இந்நிகழ்வில் யுனப்ஸ் நிறுவன திட்ட முகாமையாளர் சிமொனிரா  சிலிகாரோ  , யுனப்ஸ் நிறுவன நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் , சிவகுமாரன் ,மட்டக்களப்பு   மாநகர சபை பிரதி ஆணையாளர் என் . தனஞ்சயன் , மட்டக்களப்பு மாநகர சபை மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்  ஆர் .நந்தகுமார் , மாநகர சபை  பொது சுகாதார பரிசோதகர்  எஸ் . அமுதமாலன்  மாநகர சபை ஊழியர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர் .