சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது தொடர்பாகவே பிள்ளையான் தெளிவுபடுத்தினார் –ரி.எம்.வி.பி.அறிக்கை

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்டு மக்களின் நலனுக்காககுரல் கொடுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குரிய சிறப்புரிமைமீறப்பட்டுள்ளது தொடர்பாகவே முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் தெளிவுபடுத்தினார் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிவெளியிட்டுள்ளஊடகஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 இது தொடர்பில் அக்கட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாணத்தில் முதல் முதலமைச்சராக இருந்து இன,மத,மொழி பேதமின்றி அர்ப்பணிப்புடன் சேவையாற்றி சுயகௌரவத்துடன் அபிவிருத்தி பணிகளைச் செயற்படுத்தி கிழக்கு மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் சி.சந்திரகாந்தன். பயங்கரவாதத்தினை வெறுத்து ஜனநாயகத்தினை நேசித்ததலைவன் துரதிஸ்டவசமாக சிறைச்சாலையில் ஒரு வருட காலமாக பயங்கரவாததடைச்சட்டத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான சி.சந்திரகாந்தன் கம்பிக் கூட்டுக்குள் அடைக்கப்பட்டாலும் கிழக்கு மண்ணை நேசிப்பதனையும் மக்கள் சேவையினை உயிர்மூச்சாக கொண்டு வாழ்வதனையும் தடைபோட முடியாது என்ற அடிப்படையில் பலத்தகாவலுடனும் கைவிலங்குடனும் நீதிமன்ற அனுமதியின் பிரகாரம் மாகாணசபை அமர்வுகளுக்கு சென்று மக்கள் குறைநிறைகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்துவருகின்றார்.

அந்த வகையிலேயே கடந்த 27.10.2016 ம் திகதி மாகாணசபை அமர்வில் கலந்துகொண்ட முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் அவர்கள் பிற்பகல் 3.15 மணிக்கு அமர்வு முடிந்தநிலையில் நடந்தஎதிர்க்கட்சி தலைவர் கௌரவஉதுமாலெப்பை அவர்களின் தலைமையிலான கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தபோது சி.சந்திரகாந்தன் அவர்களை மாகாண சபை சட்ட ஒழுங்கு சிறப்புரிமைகளினை மீறிசட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸ் அதிகாரியே முறைகேடாக நடந்து கொண்டார் அதனை எதிர்க்கட்சிதலைவர் கௌரவ உதுமாலெப்பை அவர்கள் குறித்தபொலிஸ் அதிகாரிக்கு சுட்டிக்காட்டிய போதும் அதனைபுறம் தள்ளிவாய் நிரம்ப வெற்றிலைமென்று கொண்டு மக்களால் தெரிவுசெய்யப்பட்;ட முன்னால் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமானசி.சந்திரகாந்தன் அவர்களைமிகவும் இழிவாக சிறப்புரிமையைமீறும் வகையில் நடந்துகொண்டபொலிஸ் அதிகாரியை, ஜனநாயகக் கட்சி என்ற வகையிலும் கிழக்குமாகாணத்தில் தனிமனித சுயகௌரவத்துடன் இன ஒற்றுமையை ஏற்படுத்தியவர்கள் என்றவகையிலும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

சில தினங்களாக குறித்த ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் விடும் தவறுகள் மிகவும் சிறப்பாக செயற்படும் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கும் பொலிஸ்மா அதிபருக்கும் ஏனைய பொலிஸ் அதிகாரிகளுக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிடக் கூடாது.என்பதனைசுட்டிக் காட்டுவதுடன் நல்லாட்சி அரசும் பொலிஸ்மா அதிபர் அவர்களும் இவ்வாறான சிலபொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைவிடுக்கின்றோம்.