சமூக பொருளாதார அபிவிருத்தியும் , பாதுகாப்பற்ற புலம் பெயர்தலை மட்டுப்படுத்தல் தொடர்பான மூன்று நாள் வதிவிட பயிற்சி பட்டறை

(லியோன்)

சமூக பொருளாதார அபிவிருத்தியும் , பாதுகாப்பற்ற புலம் பெயர்தலை மட்டுப்படுத்தல்  தொடர்பான மூன்று நாள் வதிவிட பயிற்சி பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது .


மட்டக்களப்பு அம்கோர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் சமூக பொருளாதார அபிவிருத்தியும் , பாதுகாப்பற்ற புலம் பெயர்தலை மட்டுப்படுத்தலும்   என்ற திட்டத்திற்கு அமைவாக  மூன்று நாள் சமூக வலுவூட்டல் பயிற்சி பட்டறை  மட்டக்களப்பு மான்ரேசா விடுதியில் நடைபெற்றது .

சமூக வலுவூட்டல் பயிற்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து  தெரிவு செய்யப்பட ஒன்பது கிராமங்களின்  சமூக வலுவூட்டாலர்களும் அம்கோர் நிறுவன ஊழிகர்களுக்குமான  இந்த மூன்று நாள் வதிவிட  பயிற்சி பட்டறை நடைபெற்றது . இந்த பயிற்சி பட்டறையில் சமூக வலுவூட்டல் , தலைமைத்துவம் . சிறந்த தொடர்பாடல் , நேரமுகாமைத்துவம் . பிரச்சினைகளை இனம் காணல் மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் என்ற தலைப்பின் கீழ்  பயிற்சிகள் வழங்கப்பட்டன .

இந்த  பயிற்சி பட்டறையில்  வளவாளர்களாக  மட்டக்களப்பு அம்கோர் நிறுவன தலைமை அதிகாரி  ப . முரளிதரன் , நிறுவன திட்ட முகாமையாளர் வை  .சிவயோகராஜன்  கலந்துகொண்டதுடன்  இந்த மூன்று  நாள் பயிற்சி  பட்டறையில்  கலந்துகொண்டவர்களுக்கான  சான்றிதழ்கள்  வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்


இந்நிகழ்வில்  அம்கோர்  நிறுவன உத்தியோகத்தர்கள்  வெளிகள உத்தியோகத்தர்கள்  மற்றும் பயிற்சியாளர்கள்  கலந்து கொண்டனர்.