ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவில் மூன்றாண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயல் திட்டம்

 (லியோன்)


ஏறாவூர் நகர்  பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அனர்த்தம் அபாய குறைத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று ஏறாவூர் நகர்  பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது .


மட்டக்களப்பு ஏறாவூர் நகர்  பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட  ஏறாவூர் நகர் ,ஏறாவூர் பற்று (செங்கலடி ) , மண்முனை மேற்கு ( வவுணதீவு ) போரதீவுபற்று ( வெல்லாவெளி ) மண்முனை வடமேற்கு (பட்டிப்பளை )  ஆகிய கிராம சேவை பிரிவிகளில் பாம் புவுன்டேசன்  நிறுவனத்தின் அனுசரணையில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற அனர்த்தம் அபாய குறைத்தல் தொடர்பான   மூன்று ஆண்டு செயல் திட்டம் தொடர்பாக கலந்துரையாடல்  அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஏறாவூர் நகர் பிரதேச செயலக  ஏற்பாட்டில் பாம் புவுன்டேசன்  நிறுவன  திட்ட முகாமையாளர் அருளானந்தம் சக்தி  ஒழுங்கமைப்பில்  ஏறாவூர் நகர் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்   திருமதி . எம் .எ , சி . ரமீஸா தலைமையில் இன்று  ஏறாவூர் நகர்  பிரதேச செயலக மண்டபத்தில்  நடைபெற்றது .

இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஏறாவூர் நகர்  பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மூன்றாண்டுகளின் அனர்த்தம் அபாய குறைத்தல் செயல்  திட்டம் , பங்குதாரர்களுடனான  திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் ,  திட்டத்திற்கான அதிகாரிகளின்  வலுவூட்டல் போன்ற திட்டங்கள் தொடர்பான  கலந்துரையாடலாக இந்த  நிகழ்வு இடம்பெற்றது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ உதவியாளர்  எ.எம் .ஹாசிர் , பொது  சுகாதார வைத்திய அதிகாரி செல்வி துரைராஜசிங்கம் , திவிநெகும திணைக்கள உத்தியோகத்தர்கள் , பிரதேச சபை அதிகாரிகள் , தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை உத்தியோகத்தர்கள் , நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் , பிரதேச செயலக அதிகாரிகள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் 
கலந்துகொண்டனர்