மாவட்ட சிறுவர் சபை சிறார்களுடனான திறந்த கருத்து கள அமர்வு

(லியோன்)

உலகளாவிய  சிறுவர் உரிமை தினத்தை முன்னிட்டு  மாவட்ட சிறுவர் சபை சிறார்களுக்கான திறந்த கள அமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .


“எங்களுக்கு உலகம் தேவை “ எனும் தொனிப்பொருளில்  நாடளாவிய ரீதியில் சிறுவர் உரிமைகளுக்காக  பல விழிப்புணர்வு நிகழ்வுகளும் , சுவர் ஒட்டி பிரசுரங்களும் , வீதி நாடகங்களும்  சிறுவர் உரிமைகளுக்காக    நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன .

இதன் ஊடாக பெறப்படும் சிறுவர் உரிமைகளின்   கருத்துக்களை ஆவணமாக்கி  எதிர் வரும்  20 ஆம் திகதி  கொழும்பு BMI CH  ல் முன்னால்  ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க தலைமையில் நடைபெறவுள்ள உலக சிறுவர் உரிமைக்கான கருத்துக்கள்  பரிந்துரைப்பு நிகழ்வில் பரிந்துரைக்கப்படவுள்ளன .

இதற்கான ஆவன பரிந்துரைகளுக்கான கிழக்குமாகாண  சிறுவர்களுக்கான கள அமர்வு  இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .

இந்நிகழ்வானது மாவட்ட நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு  சேவைகள் திணைக்களமும் பீஸ் நிறுவனமும் இணைந்து  நன்னடத்தை திணைக்களத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டு இயங்குகின்ற மாவட்ட சிறுவர் சபை சிறார்களுடனான திறந்த கருத்து பகிர்வு கள அமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் வி குகதாசன் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு சர்வோதய நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் பீஸ் நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் எம் .மாறூப் கலந்துகொண்டு சிறுவர் உரிமைகள் தொடர்பான விரிவுரைகளை வழங்கியதுடன் இந்த நிகழ்வில் கிழக்குமாகாண சிறுவர் சபை சிறுவர்கள் திருகோணமலை , அம்பாறை , மட்டக்களப்பு  ஆகிய மாவட்டங்களின் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .