சர்வோதய ஸ்தாபகர் கலாநிதி எ .டி ஆரியரத்னவின் 85வது அகவையின் விசேட நிகழ்வுகள்

(லியோன்)

சர்வோதய ஸ்தாபகர் கலாநிதி எ .டி ஆரியரத்னவின் 85வது  அகவையினை சிறப்பிக்கும் விசேட நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
.   

சர்வோதயத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கலாநிதி எ.டி..ஆரியரத்னவின் 85வது  அகவையில் காலடி பாதிக்கும் நிகழ்வினை  முன்னிட்டு  விசேட நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது .  

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட  தேசோதய சபையும் மட்டக்களப்பு பிராந்திய சர்வோதயமும் இனைந்து  மட்டக்களப்பு மாவட்ட தேசோதய  தலைவரும் , மயிலம்பாவெளி  விக்னேஸ்வரா வித்தியாலய பிரதி அதிபருமான  எம் .பகிரதன்  ஒழுங்கமைப்பில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றது .  

இதன் ஆரம்ப நிகழ்வாக  சர்வோதய பிராந்திய வளாகத்தில்  சிரமதான பணிகளும் தொடர்ந்து “ உதிரம் வழங்கி உயிர் காப்போம் “ எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம் இடம்பெற்றது .

இதனை தொடர்ந்து ஆரியரத்னவின் 85வது  அகவையினை  சிறப்பிக்கும் வகையில் சர்வோதய பிராந்திய வள வளாகத்தில் 85  தென்னங்கன்றுகள் நாட்டப்பட்டதுடன் தொடர்ந்து ஆரியரத்னவின் 85வது  அகவையினை  சிறப்பிக்கும் வகையில் கேக் வெட்டப்பட்டு சிறப்பு நிகழ்வுகள் சர்வோதய மண்டபத்தில் நடைபெற்றது . 

இன்று நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளிலும் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண விவசாய ,கால்நடை  அமைச்சர் கே .துரைராஜசிங்கம் கலந்துகொண்டு சிறப்பித்தார் . 


இதேவேளை நடைபெற்ற நிகழ்வுகளில்  மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர்  கே .பி . கீர்த்திரத்ன  , மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி ரவிச்சந்திரன் ,  மாகாண சர்வோதய இணைப்பாளர் இ .சி .எ . கரீம்,  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர் நளின் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் ,மட்டக்களப்பு - அம்பாறை  சர்வோதய  அங்கத்தவர்கள் . பொலிஸ் உத்தியோகத்தர்கள் , மதத்தலைவர்கள் , சிவில் அமைப்புக்கள் என   பலர் கலந்துகொண்டனர்