கழிவுகளை தரம் பிரிக்கும் பணிகள் இருதயபுரம் கிழக்கில் ஆரம்பம்

(லியோன்)


கழிவுகளை தரம் பிரிக்கும் தேசிய வேலைத்திட்டம்   மட்டக்களப்பு மாநகர சபை பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் கிழக்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது
 

இந்த திட்டமானது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தலின்படி  இலங்கையில் உள்ள அனைத்து மாநகர சபைகளிலும் கழிவு சேகரிப்பு சேவை தொடர்பில் புதிய ஒழுங்குகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன .

இதன் கீழ்  பொலித்தீன் பாவனை தடை மற்றும் திண்மக்கழிவுகள் தரம்பிரித்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு  இருதயபுரம் கிழக்கு மாநகர பாலர் பாடசாலை வளாகத்தில் 01.11.2016  காலை 8.00 மணியளவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜெசுராசா தலைமையில் நடைபெற்றது .

இந்நிகழ்வில்  மாநகரக் கணக்காளர் ஜேன்பிள்ளை, மாநகர பொது நூலக நூலகர் தி.சரவணபவான் ,மநகரசபை உத்தியோகத்தர்கள் , கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  , சமூர்த்தி உத்தியோகத்தர்கள்,  மட்டக்களப்பு கருவப்பங்கேணி விபுலானந்தா கல்லூரி ஆசிரியர்கள்,  மாணவர்கள். கிராம அபிவிருத்தி  சங்க உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்,  குடும்ப தாதியர் மற்றம் பொதுமக்கள் என பலர்  கலந்து கொண்டனர் .


இந்நிகழ்வினை தொடர்ந்து மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களினால் இப்பகுதி வீடுகளுக்கு சென்று  திண்மக்கழிவுகள் தரம்பிரித்தல் தொடர்பான அறிவுரைகளும் , கழிவுகள் அகற்றும் பணிகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது .