மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களின் பொருட்காட்சியும் விற்பனையும்

(லியோன்)


மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற  . பொருட்காட்சியும்  விற்பனையும்  இன்று மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் நடைபெற்றது .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ  விக்னேஸ்வரா வித்தியாலய ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்களின் ஒழுங்கமைப்பில் பாடசாலை பிரதி அதிபர் பஹிரதன்  வழிகாட்டலின் கீழ் மாபெரும் பொருட்காட்சியும்  விற்பனையும்  கல்லூரி அதிபர்   கே .சிறிதரன்  தலைமையில்  இன்று பாடசாலையில் நடைபெற்றது .

இந்த கண்காட்சியினை கிழக்கு மாகாண விவசாய ,கால்நடை அமைச்சர் கே .துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சியினை திறந்து வைத்தார் .
 
 இந்நிகழ்வில் செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மயிலம்பாவெளி தென்னைப் பயிர்செய்கை அபிவிருத்தி சபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட .விவசாய திணைக்கள நிறுவனங்கள் இணைந்து தமது நிறுவனங்களின் உற்பத்தி  பொருட்களை காட்சி படுத்தியதோடு விற்பனையும் நடைபெற்றது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் ,  ஏறாவூர் பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர்   எம் .பாலசுப்பிரமணியம் ,  மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கல்லூரி அதிபர் எ .எஸ் . யோகராஜா , மட்டக்களப்பு சர்வோதய பிராந்திய இணைப்பாளர் இ .சி .எ . கரீம் மற்றும் இப்பிரதேச பாடசாலைகளின் மாணவர்கள் ,ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் .