அனர்த்தம் அபாய குறைத்தல் தொடர்பான கலந்துரையாடல்

(லியோன்)

மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அனர்த்தம் அபாய குறைத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது
.  

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட கொத்தியாபுலை, இலுப்படிச்சேனை , மகிழவட்டுவான் , நரிப்புல்தோட்டம் ஈச்சந்தீவு ஆகிய கிராம சேவை பிரிவிகளில் பாம் புவுன்டேசன்  நிறுவ னத்தின் அனுசரணையில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற அனர்த்தம் அபாய குறைத்தல் தொடர்பான   மூன்று ஆண்டு செயல் திட்டம் தொடர்பாக கலந்துரையாடல் பாம் புவுன்டேசன்  நிறுவன  திட்ட முகாமையாளர் அருளானந்தம் சக்தி  ஒழுங்கமைப்பில் மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  எஸ் .ராஜ்பாபு தலைமையில் இன்று மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .

இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மூன்றாண்டுகளின் அனர்த்தம் அபாய குறைத்தல் செயல்  திட்டம் , பங்குதாரர்களுடனான  திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் , திட்டத்திற்கான அதிகாரிகளின்  வலுவூட்டல் போன்ற திட்டங்கள் தொடர்பான  கலந்துரையாடலாக இந்த  நிகழ்வு இடம்பெற்றது .


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் யு .எஸ் . எம் .ரிஸ்வி , மண்முனை மேற்கு பிரதேச சபை செயலாளர்  திருமதி . த. புத்தி சிகாமணி . மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உத்தியோகத்தர் துஸ்யந்தன், பிரதேச தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் என் . சிவநிதி , மற்றும்  மண்முனை மேற்கு , சுகாதார வைத்திய அதிகாரிகள் , திவிநெகும திணைக்கள உத்தியோகத்தர்கள் , பிரதேச சபை அதிகாரிகள் , தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை உத்தியோகத்தர்கள் , கமநல சேவைகள் நிலைய அதிகாரிகள் , நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் , வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் , பிரதேச செயலக அதிகாரிகள் கலந்துகொண்டனர் .