சர்வதேச நீரிழிவு தினத்தினை சிறப்பிக்கும் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வு

(லியோன்)

சர்வதேச நீரிழிவு தினத்தினை  சிறப்பிக்கும் வகையில்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  மாபெரும் விழிப்புணர்வு  நிகழ்வு இன்று மட்டக்களப்பு  நகரில்  நடைபெற்றது.




மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சங்கத்தின் ஏற்பாட்டில் வைத்திய நிபுணர் திருமதி . தர்சினி கருப்பையா தலைமையில்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .பி.எஸ் .எம் .சார்ள்ஸ் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள் , தாதிய உத்தியோகத்தர்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர் .

இதன் போது நீரிழிவு நோயின் தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு நாடகம், நீரிழிவு தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து  நோயிக்கான  சிகிச்சை முறைகள் தொடர்பிலான பதாகைகளையும் ஏந்தியவாறு ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள்.



இந்த விழிப்புணர்வு ஊர்வலமானது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று அங்கு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் பிரதேச செயலாளர் வி.தவராஜா மற்றும் பிரதேச அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் . தொடர்ந்து இந்த விழிப்புணர்வு ஊர்வலம் அங்கு இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு நகர் ஊடாக மீண்டும் வைத்தியசாலை வரை நடைபெற்றது .