கோரளைப் பற்று தெற்கு கிரான் பிரதேச இளைஞர் பயிற்சி முகாமை இன்று வெள்ளிக்கிழமை மாலை கெளரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை (வெள்ளிமலை) ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

(சசி துறையூர்) 

மட்டக்களப்பு கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச இளைஞர் முகாம் இன்று மாலை கிரான் பறங்கியாமடு கோரக்கல்லிமடு மக்கள் உதவி மக்கள் ஸ்தாபன( PHPF) கேட்போர் கூடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இந் நிகழ்விற்கு கெளரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார் என கிரான் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி த.விந்தியன் தெரிவித்தார்.


மேலும் இந் நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் கே.தனபால சுந்தரம், மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் ஜனாப் MLMN நைறுஸ், தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் தலைவருமான கி.சேயோன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளதாக பிரதேச இளைஞர் சேவை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

மேலும் மூன்று நாள் வதிவிடமாக நடைபெறவுள்ள இந்த முகாமில் 100 இளைஞர் யுவதிகளுக்கு நாட்டின் சிறந்த பிரஜையாக மாறுவதற்கான பயிற்சிகளும் வழிகாட்டல்களும் இடம்பெறவுள்ளது .