மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக மூத்த பிரஜைகளுக்கு தனிப்பட்ட ஒரு கட்டிடம்

(லியோன்)        

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக மூத்த பிரஜைகளுக்கு என்று தனிப்பட்ட ஒரு கட்டிடம்  கட்டப்படுவது இதுதான்  முதல் கட்டிடமாகும்  என இன்று நடைபெற்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கான அலுவலக கட்டிடத்திற்கான  அடிக்கல்  நாட்டும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா   தெரிவித்தார் .


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட  மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கிராம சேவையாளர் பிரிவில்  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர் வாழ்வளிப்பு மீள் குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள்    அமைச்சின் 865000 ரூபா  நிதி  ஒதுக்கீட்டின்    கீழ் சிரேஷ்ட பிரஜைகளுக்கான அலுவலக கட்டிடத்திற்கான   அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜெயந்திபுரம் சிரேஷ்ட பிரஜைகள் சங்க தலைவர் யே..வேதநாயகம் தலைமையில்  இன்று நடைபெற்றது .

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல்லை  நாட்டிவைத்தார் .

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதேச செயலாளர்  உரையாற்றுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக மூத்த பிரஜைகளுக்கு என்று தனிப்பட்ட ஒரு கட்டிடம்  கட்டப்படுவது இதுதான் முதலாவது கட்டிடமாகும் .

மூத்த பிரஜைகளுடன் நான் கேட்டுக்கொள்வது உங்களுடைய ஆலோசனைகள்  இன்றுள்ள இளைஞர்களுக்கு ,யுவதிகளுக்கு ,சிறுவர்களுக்கு  தேவை , உங்களுடைய அனுபவ பகிர்வு மிக முக்கியமானது .

அதை நீங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் .  இன்றைய இளைஞர்களுக்கு தாய் தந்தையாருடைய மதிப்பு தெரிவதில்லை , அவர்கள் படுகின்ற கஷ்டங்கள் புரிவதில்லை.

எனவே மூத்த பிரஜைகள் என்ற வகையில் நீங்கள் புத்தி புகட்டுங்கள் , உங்களுடைய அனுபவங்களை சொல்லுங்கள் , அவ்வாறு சொல்கின்ற வேளையில் தான் இந்த சமுதாயத்தில் இவர்களை  நல்ல பிரஜைகளாக மாற்ற முடியும் என  தெரிவித்துக்கொண்டார் .

இந்த நிகழ்வில் ஜெயந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் தோமஸ் கந்தையா ,கிராம சேவை உத்தியோகத்தர் வி .லகுமார் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , சிரேஷ்ட பிரஜைகள் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .