சமுதாயத்துடைய விருத்தி மேம்படுவதற்கு மிக முக்கியமானது கலைகளும் கலை இலக்கியங்களும் என்றால் அது மிகையில்லை

(லியோன்)

ஒரு சமுதாயத்துடைய  .வளர்ச்சி என்பது வெறுமனே கட்டுமானங்களிலும் ,பொருளாதார அபிவிருத்தியில் மட்டுமாக தங்கி இருப்பதில்லை .மாறாக சமுதாயத்துடைய ஆளுமை ,அந்த சமுதாயத்துடைய விருத்தி மேம்படுவதற்கு மிக முக்கியமாக அமைந்தது கலைகளும் கலை இலக்கியங்களும் என்றால் அது மிகையில்லை என கிழக்கு மாகாண  பண்பாட்டலுவல்கள்  திணைக்கள  மாகாணப் பணிப்பாளர்  திருமதி .சிவப்பிரியா விவரத்தினம் தெரிவித்தார் .


அஸம்புத ஸம்புத  ஹஸ்த விநியோக போட்டிக்கான பரிசு வழங்கும் நிகழ்வும் நடன விழாவும் மட்டக்களப்பில் (11)  வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது .

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்வி வலய நடன ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில்  மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளின் நடன ஆசிரியர்கள் மற்றும் நடன மாணவர்களின் அஸம்புத ஸம்புத  ஹஸ்த விநியோக போட்டிக்கான பரிசு வழங்கும் நிகழ்வும் நடன விழாவும் வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் தலைமையில்  மட்டக்களப்பு மகாஜன கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .

இந்த நடன விழா நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது  அதனை தொடர்ந்து  நடன ஆசிரியர்களின் அரங்க பூஜை நடைபெற்றது .

இதனை தொடர்ந்து  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாரம்பரிய கலாசார நடன நிகழ்வுகள் நடைபெற்றது .
இதன் போது புஸ்பாஞ்சலி , கதகளி நடனம் , சண்முக கௌத்துவம் , காவடி நடனம் , பதம் , உழவர் நடனம் , தில்லானா போன்ற பாரம்பரிய கலாசார நடனங்கள் இடம்பெற்றன .

இங்கு இடம்பெற்ற  அதிதிகளின் உரையின் போது கிழக்கு மாகாண  பண்பாட்டலுவல்கள்  திணைக்கள  மாகாணப் பணிப்பாளர்  திருமதி .சிவப்பிரியா விவரத்தினம் தெரிவிக்கையில் ஒருகாலத்தில்  ஆங்கில மொழி விழா , தமிழ் மொழி விழாக்கள்  நடத்தப்பட்டு  அதனூடாக மாணவர்களின் திறமைகள் வெளிகொண்டுவரப்பட்டன .

அதேபோன்று நடனத்திற்கு என்று ஒரு நாளை  இன்று ஒதுக்கி அதை ரசிக்க வைக்க வைத்திருப்பது என்பது நடன ஆசிரியர்கள் மேற்கொண்டிருக்கின்ற மிக பெரிய விடயமாகும்.

ஒரு சமுதாயத்துடைய  .வளர்ச்சி என்பது வெறுமனே கட்டுமானங்களிலும் ,பொருளாதார அபிவிருத்தியில் மட்டுமாக தங்கி இருப்பதில்லை . மாறாக சமுதாயத்துடைய ஆளுமை ,அந்த சமுதாயத்துடைய விருத்தி மேம்படுவதற்கு மிக முக்கியமாக அமைந்தது கலைகளும் கலை இலக்கியங்களும் என்றால் அது மிகையில்லை .

அந்த வகையில் கலைக்கென நாளை ஒதுக்கி மாணவர்களை ஊக்கப்படுத்துவது மட்டமல்லாது இந்த சமுதாயத்தினையும்  இங்கு அழைத்து சாஸ்த்திரிய நடன கலைகளை  ரசிக்க  வைக்க வேண்டும் என கிழக்கு மாகாண  பண்பாட்டலுவல்கள்  திணைக்கள  மாகாணப் பணிப்பாளர் தெரிவித்தார் .


இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக   கிழக்குப் பல்கலைக்கழக  நுண்கலைத்துறை ஒய்வு நிலைப் பேராசிரியர் கலாநிதி சீ . மௌனகுரு ,  கிழக்கு மாகாண  பண்பாட்டலுவல்கள்  திணைக்கள  மாகாணப் பணிப்பாளர்  திருமதி .சிவப்பிரியா விவரத்தினம் , சிறப்பு அதிதிகளாக ஒய்வு பெற்ற அதிபரும் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கு . சௌந்தராஜா , கல்குடா வலயக்கல்வி அலுவலக பிரதி கல்விப் பணிப்பாளர்  திருமதி .சாமினி ரவிராஜா மற்றும் மட்டக்களப்பு வலயக்கல்விப் உதவி கல்விப்பணிப்பாளர்கள் ,கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் ,கல்வி வலய பாடசாலைகளின் நடன ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள்   என பலர் கலந்துகொண்டனர்