மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஐந்தாவது மேய்ப்புப்பணிச்சபை மகாநாடு

(லியோன்)


மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஐந்தாவது மேய்ப்புப்பணிச்சபை மகாநாடு மட்டக்களப்பில் நடைபெற்றது


மட்டக்களப்பு  மறை  மாவட்டத்தின்   மறை  மாவட்ட  மேய்ப்புப்பணிச்சபையின்  ஐந்தாவது  மகாநாடு  மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கிலெனி  மேய்ப்புப்பனிச்சபை   நிலையத்தில்   மறை  மாவட்ட  ஆயரும் மேய்ப்புப்பணிச் சபை  தலைவருமான கலாநிதி    ஜோசப்  பொன்னையா  ஆண்டைகை  தலைமையில்  இன்று நடைபெற்றது

திருத்தந்தையினால்  2017  ஆம் ஆண்டு  புனித யோசேப்வாஸ்  ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்ட  புனித யோசேப்வாஸ் ஆண்டினை  மட்டக்களப்பு மறை மாவட்டத்தில்   நடைமுறைப்படுத்த ஆயரினால் அறிவிக்கப்பட்டு அது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது .

நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் “ அன்பு மகிழ்ச்சியும் நிறைந்த குடும்பங்களை நெறிப்படுத்திய புனித யோசெப்வாஸ் “ என்னும்  தலைப்பில்   யாழ்பாணம் பல்கலைகழக கிறிஸ்தவ ஆன்மீக உதவியாளரான  அருட்தந்தை எஸ் .ஜே. இராசநாயகம் அதிதியாக கலந்துகொண்டு ஆன்மீக கருத்துரைகள் வழங்கினார் .

இதன்போது மகாநாட்டில் கலந்துகொண்ட  கத்தோலிக்க பங்கு  மேய்ப்புப்பனிச் சபையினரால்  கடந்த கால செயல்திட்டத்தின் மீளாய்வுகளும் எதிர்கால ஓராண்டு திட்டங்கள் தொடர்பாகவும் மறை  மாவட்டத்திலும்   பணித்தளங்களிலும்  முன்னெடுக்கப்பட  வேண்டிய  செயல்பாடுகள்  தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது .

இடம்பெற்ற கலந்துரையாடலின் போது புனித யோசேப்வாஸ்  ஆண்டினை  மறை மாவட்ட  பங்கு மக்களினால்  நாளாந்த  வாழ்வை  இறை  அனுபவத்துடன்   அன்புடனும்  நோக்குவதனுடாகவும்  அதைனை   பிறருடன்  பகிந்து கொள்வதனுடன்    இறை  அன்பினை  ஆழப்படுத்தலாம்  எனவும்  கருத்துக்கள்  முன் வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது .  
இதனை தொடர்ந்து ஆயர் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஐந்தாவது மறை மாவட்ட  மேய்ப்புப்பனிச் சபை  மகா நாட்டு நிகழ்விலும் திருப்பலியிலும்   மட்டக்களப்பு மறை  மாவட்டத்தின்   அனைத்து கத்தோலிக்க பங்கு  மேய்ப்புப்பனிச் சபைகளின்  உறுப்பினர்கள் ,ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் , அப்போஸ்தலிக்க சபை உறுப்பினர்கள்  பங்கு  பக்தி சபையினர்  மற்றும்  பொது நிலையினர்  கலந்துகொண்டனர்