மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான இளைஞர் முகாம் எதிர் வரும் 11,11,2016 வெள்ளிக்கிழமை ஆரம்பம்.

(சசி துறையூர்) கெளரவ பிரதமரின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வரும் வேலைத்திட்டமான பிரதேச இளைஞர் முகாம் எதிர்வரும் 11,11,2016 வெள்ளிக்கிழமை பி.ப 02.30 மணிக்கு எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது என
பிரதேச இளைஞர் சேவை அதிகாரி திருமதி கே. சதீஸ்வரி தெரிவித்தார்.

பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் மேற்பார்வை மற்றும் ஒருங்கினைப்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இம் முகாமில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுற்குட்பட்ட 44 கிராம சேவையாளர் பிரிவுகளிலிருந்தும் இளைஞர் கழகங்களைச் சேர்ந்த100 இளைஞர் யுவதிகள் பங்கு பற்றவுள்ளனர்.

மூன்று நாட்கள் வதிவிடமாக நடைபெறவுள்ள இந்த முகாமில் பங்கு பற்ற ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகள் முன் கூட்டியே தங்களை பதிவு செய்து கொள்ளமுடியும் எனவும் பதிவுகளுக்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் செல்வன் ரி. வேணுராஜ் என்பவரை தொடர்பு கொள்ளள முடியும் எனவும் இளைஞர் சேவை அதிகாரி தெரிவித்தார்.

மண்முனை தென் எருவில் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இம் முகாமின் போது இளைஞர்களின் ஆளுமை விருத்திக்கான, வினைத்திறனான முடிவு எடுத்தல், திட்டமிடல், மென் திறன் விருத்திக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை வழி காட்டல் என்பன துறை சார்ந்த வளதாரிகளால் வழங்கப்படவுள்ளது.

அத்தோடு முகாமின் சிறப்பு வேலைத்திட்டமாக இசையும் இரசனையும், தீப்பாசறை நிகழ்வுகளும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.