மட்டு - மகாஜன கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு

  (லியோன்)

மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின்  ஆசிரியர் தின   நிகழ்வு  மிக  சிறப்பாக  கல்லூரியில்  நடைபெற்றது .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட   மட்டக்களப்பு மகாஜன கல்லூரி ஆசிரியர் தின   நிகழ்வுகள்   பாடசாலை  அபிவிருத்தி குழு உறுப்பினர்களின் ஏற்பாட்டில் கல்லூரி மாணவர்களின் ஒழுங்கமைப்பில் அதிபர் .திருமதிஎன் துரைராஜசிங்கம்   தலைமையில் (27)  கல்லூரி பிரதான  மண்டபத்தில் நடைபெற்றது . 

ஆரம்ப  நிகழ்வாக மாணவர்களினால்  அதிதிகளையும் ,ஆசிரியர்களையும்  வரவேற்கும்  நிகழ்வு  நடைபெற்றது .

அதனை  தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன்  ஆசிரியர் கீதம் இசைக்கப்பட்டு ஆசிரியர்  தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளும் , ஆசிரியர்களுக்கான  கௌரவிப்பு  நிகழ்வும் நடைபெற்றது  .

சமூகத்திற்கும்  நாட்டுக்கும்  நற்பிரஜைகளை உருவாக்குவதில் வழிகாட்டியாக இருக்கின்ற  ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில்  கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது


இந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் ,  பாடசாலை  ஆசிரியர்கள் ,மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்  என பலர் கலந்து சிறப்பித்தனர் .