உலக உணவு தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு நிகழ்வு

(லியோன்)

உலக உணவு  தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலமும் அனுபவ பகிர்வும் மட்டக்களப்பில் நடைபெற்றது
.

உலக உணவு  தினத்தை முன்னிட்டு   மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவன அனுசரணையில் நிறுவன  இயக்குனர் அருட்தந்தை சிரோன் டி லிமா தலைமையில்  மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலமும் , அனுபவ பகிர்வும் (27) வியாழக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது .

இதன் ஆரம்ப நிகழ்வாக கல்லடி பாலத்தின் அருகில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஊடாக மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தை வந்தடைந்தது .

இதனை தொடர்ந்து இந்நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளை  வரவேற்கப்பட்டு தொடர்ந்து   மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது .  

நடைபெற்ற உலக உணவு தினத்தை சிறப்பிக்கும் வகையில் விவசாயிகளின் விவசாய அனுபவ பகிர்வுகளும் ,அதிதிகளின் சிறப்பு உணவு பாதுகாப்பு தொடர்பான  சிறப்புரைகளும் , இடம்பெற்றது ,

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் கே .துரைராஜசிங்கம் , மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை , இலங்கைக்கான  செடெக்  நிறுவன பணிப்பாளர்  அருட்தந்தை சாந்திகுமார் வெளிவிட்ட  ,உலக உணவு திட்ட பொறுப்பாளர்  திருமதி . நிலானி திசேரா  மற்றும் எகெட் கரித்தாஸ் நிறுவன ஊழியர்கள் , மட்டக்களப்பு ,அம்பாறை விவசாய திணைக்கள அதிகாரிகள் .  வைத்தியர்கள் , பாடசாலை மாணவர்கள் ,விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர் கலந்துகொண்டனர் .
இந்நிகழ்வின் போது சிறந்த விவசாயிகளாக தெரிவு செய்யப்பட விவசாயிகளுக்கு சான்றிதழ்களும் , பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது .