மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் 44 இளைஞர் அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் நிறைவடையும் தருணத்தில்.
தேசியக் கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் செயற்படுகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றமானது மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இளைஞர் கழகங்களினூடக கிராமங்கள் தோறும் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
வீதி புனரமைப்பு, சிறுவர் பூங்கா அமைத்தல், மைதான புனரமைப்பு மற்றும் நிர்மானம், புதிய நூலகம் அமைத்தல், அஞ்சலி பீடம் அமைத்தல், உடற் பயிற்ச்சி நிலையம் அமைத்தல், மைதான சுற்று மதில் அமைத்தல், துவிச்சக்கர வண்டி தரிப்பிடம் அமைத்தல், ஆலய புனரமைப்பு, மையவாடி புனரமைப்பு என பல பெறுமதியான திட்டங்கள் நடை பெற்று வருகின்றன.
அனைத்து திட்டங்களும் சிறப்பான முறையில் பூர்த்தி செய்யப்படும் இறுதித் தருணத்தில் இருப்பதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஜனாப் MLMN. நைறுஸ் எமது செய்தி தளத்திற்கு தகவல் தெரிவித்தார்.
உதவிப் பணிப்பாளர் மேலும் கூறுகையில்.
ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவிகளிலும் மாவட்டத்துக்கு கிடைத்த 44 வேலைத்திட்டங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
அந்த வகையில் இளைஞர் கழகங்களால் கிராமத்துக்கு தேவையான அத்தியாவசியமிக்க திட்டங்கள் இனம் காணப்பட்டு முன்னுரிமைப்படுத்தப்பட்டதன் அடிப்படையில்
விண்ணப்பங்கள் பிரதேச மட்டத்தில் நேர்முகத் தேர்வு மூலம் பரிட்சிக்கப்பட்டு, இரண்டாம் கட்டமாக மவட்ட ரீதியில் நேர்முகத்தேர்வு நடாத்தப்பட்டு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தக் கூடிய பொருத்தமான இளைஞர் கழகங்கள் தெரிவு செய்யப்பட்டன.
அந்த வகையில் ஒரு வேலைத்திட்டத்திற்கு ரூபா 75000/= மாத்திரமே தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மூலம் வழங்கப்ட்ட நிலையில் ஒவ்வொரு இளைஞர் கழகமும் தங்களது முயற்சி மற்றும் கிராமத்தினுடைய பொதுமக்கள் நலன் விரும்பிகள் அரசியல் வாதிகளினுடைய பங்களிப்புடன் ரூபா 225000/= மேற்பட்ட நிதி பொறுமதி உடையதாக வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை விசேட கவனத்துக்குரியது.
அந்த வகையில் திட்டங்கள் அனைத்தும் எதிர் வரும் நவம்பர் மாதம் 12ம் திகதிக்கு முன்பாக நிறைவு செய்து மக்கள் பாவனைக்கு உத்தியோக பூர்வமாக கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் . தேசிய ரீதியில் இடம் பெறும் மதிப்பீட்டில்

முதலிடம் பெறும் இளைஞர் கழகத்துக்கு முதலாம் பரிசாக ஒரு கோடி ரூபா பணப் பரிசும். முதல் எட்டு இடங்களை பெறும் வேலைத்திட்டங்களுக்கு ரூபா 100000.00 பத்து இலட்சமும் பரிசாக வழங்கப்படவுள்ளது என உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.