நூலக,தகவல் விஞ்ஞானடிப்ளோமா2017ஆம் ஆண்டுக் கற்கைநெறிக்கானவிண்ணப்பம் கோரல்

இலங்கைநூலகச் சங்கத்தினால் கொழும்பு, பதுளை, காலி, கண்டி,மட்டக்களப்பு,யாழ்ப்பாணம்; ஆகியபகுதிகளில் நடாத்தப்பட்டுவரும்,நூலக,தகவல் விஞ்ஞானடிப்ளோமா((DIPLIS) ) கற்கைநெறியின் 2017ஆம் ஆண்டுக்கானவிண்ணப்பங்கள் தற்போதுகோரப்பட்டுள்ளன.


கொழும்பு,மட்டக்களப்பு,யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் தமிழ்மொழி மூலமும் நடாத்தப்படுகின்ற இக்கற்கைநெறியானது,மூன்றுவருடநிலைகளைக் கொண்டதாகவும்,ஒவ்வொருவருட இறுதிப்பரீட்சையில் சித்திபெறுவோர்அடுத்தவருடநிலைக்குதகுதிபெறுவார்கள்.

2017ஆம் ஆண்டுக்கான 1ஆம் வருடக் கற்கைநெறியில் இணையவிரும்புபவர்கள்,அங்கீகரிக்கப்பட்டபல்கலைக்கழகம் ஒன்றில் ஏதேனும் பட்டம் பெற்றவர்களாகவோஅல்லதுக.பொ.த. (உயர்தரம்) பரீட்சையில் ஒரேஅமர்வில் மூன்றுபாடங்களிலும் சித்திகளைக் கொண்டிருப்பதோடு,க.பொ.த. (சாதாரணம்) பரீட்சையில் இரண்டுக்குமேற்படாதஅமர்வுகளில் தாய்மொழியில் திறமைச்சித்தியுடன்;,ஆறு பாடங்களில்(கணிதம் மற்றும் ஆங்கிலம் உட்பட) சித்தியும் பெற்றிருத்தல் அவசியமாகும்.

இலங்கைநூலகச் சங்கத்தின் மட்டக்களப்பு நிலையமான, வின்சன்ட் மகளிர் உயர்தரதேசியபாடசாலையில் ஒன்றுவிட்டொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நேரடியான விரிவுரை அடிப்படையில்நடாத்தப்படப்போகும் முதலாம் வருடகற்கைநெறிக்கானகட்டணம் ரூபா16000/-ஆகும்.

மூன்றுவருடக் கற்கைநெறியின் பின், இலங்கைநூலகச்சங்கத்தின் அங்கத்துவத்தைப் பெறுவதோடு,கொழும்புப் பல்கலைக்கழகதேசியநூலக,தகவல் விஞ்ஞானநிறுவகத்தில் (DIPLIS) உயர்கல்வியைத் தொடரவும் வாய்ப்பேற்படுத்தப்பட்டிருப்பதாகவும்,கிழக்குமாகாணநூலக,தகவல் விஞ்ஞானஒருங்கிணைப்பாளரும்,விரிவுரையாளருமானதீசன் ஜெயராஜ் தெரிவித்தார்.

www.slla.org.lk எனும் இணையமுகவரியில் விண்ணப்பப்படிவத்தைத் தரவிறக்கம் செய்து,அதனைநிரப்பி“இலங்கைநூலகச் சங்கம்” எனும் பெயருக்குஎழுதப்பட்டதும்,“டொறிங்டன் உப தபால் அலுவலகத்தில்”மாற்றக்கூடியதுமானரூபா200/- பெறுமதியானகாசுக்கட்டளையுடன் கீழ்வரும் முகவரிக்கோஅல்லதுதரவிறக்கம் செய்யஇயலாதவர்கள், தமக்கானவிண்ணப்படிவத்தைக் கோரும் கடிதத்துடனும்மேற்படி பெறுமதியானகாசுக்கட்டளையுடனும்,9”*4” அளவுள்ளதபால் உறையில் சுயமுகவரியிட்டுரூபா 15ஃ- ஒட்டி,பிறிதொருஉறையினுள் வைத்து,Education Officer, Sri Lanka Library Association, OPA Centre, No. 275/75, Prof.Stanley WijesunderaMawatha, Colombo – 07எனும் முகவரிக்குஉடனடியாகவேஅனுப்பிவிண்ணப்படிவத்தைப் பெற்று,எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதிக்குமுன்னர் அனுப்பிவைக்கலாம். விண்ணப்பதாரிகள் மூலச் சான்றிதழ்களின் உறுதித்தன்மையைநிரூபிக்க,நேர்முகப்பரீட்சைக்குஅழைக்கப்படுவார்கள்.

மேலதிகதகவல்களைப் பெறவிரும்புவோர் ஒருங்கிணைப்பாளரும், விரிவுரையாளருமானதீசன் ஜெயராஜூடன் 071-3412206 எனும் இலக்கத்தில் தொடர்புகொண்டும்அறிந்துகொள்ளலாம்.