மட்டக்களப்பில் சூற்று சூழல் ஆர்வலர்கள் இணைந்து நடாத்திய சிரமதான நிகழ்வு

மட்டக்களப்பு நகரை தூய்மைப்படுத்த மாநகர சபை ஊழியர்களுக்கு மட்டும் பொறுப்பல்ல.மட்டக்களப்பு நகர மக்களுக்கும் அந்த பொறுப்புள்ளது.அந்த பொறுப்பினை உணர்ந்து செயற்படும்போது நகரை அழகிய நகராக மாற்றமுடியும்.

சமூகம் சாந்து சிந்திக்கும் ஒவ்வொருவரும் இது தொடர்பில் சிந்திப்பது வரவேற்கத்தக்க விடயம்.அந்த வகையில் மட்டக்களப்பில் உள்ள சுற்றுசூழல்கள் ஆர்வலர்கள் இணைந்து சிரமதான பணியொன்றை இன்று காலை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு மாநகரசபையுடன் இணைந்து இந்த பணியை மட்டக்களப்பு வாவிக்கரை வீதி ஒன்று பகுதியை சுத்தம் செய்யும்பணியை மேற்கொண்டனர்.

இந்த சிரமதான பணியில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உள்ளுராட்சி வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபை மேற்கொண்டுவரும் செயற்பாடுகளுக்கு இணைவாக இது நடாத்தப்பட்டுள்ளது.

இந்த சிரமதான பணியில் பெருமளவான ஆர்வலர்கள் கலந்துகொண்டதுடன் விளையாடடுக்கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.