மட்டு.நியூஸ் செய்திக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் விளக்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் மட்டும் வாவிக்கரை எல்லையில் இருந்து 500 மீற்றருக்கு அப்பால் பாதுகாப்பு வேலிகளை அமைப்பது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் எந்தவிதமான அனுமதியினையும் வழங்கவில்லை என்று மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

எமது இணையத்தளத்தில் கடந்த 26ஆம் திகதிகடற்கரை பாதுகாப்பு செயற்றிட்டத்தை முறையற்ற விதத்தில் பாவிக்க ஹிஸ்புல்லா முயற்சிக்கின்றார் –ஜனா குற்றச்சாட்டு” என்னும் தலைப்பில் வெளியான செய்தி தொடர்பில் மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் விடுத்துள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இவ்விடயம் தொடர்பில் , 10.10.2016 அன்று காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் அதற்கான அனுமதியை அரசாங்க அதிபர் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவது முற்றிலும் தவறானது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் 24ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குறித்த காத்தான்குடி ஆற்றங்கரை எல்லையிடல் விடயம் கலந்துரையாடப்பட்டு இறுதியில் இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த செய்தி முழுமையான தெளிவுபடுத்தல் இன்றி வெளியிடப்பட்டுள்ளது என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாவட்டத்தில் ஏறாவூர் பற்று, ஏறாவூர் நகரம், மண்முனைப்பற்று, காத்தான்குடி, மண்முனை வடக்கு ஆகிய பிரதேசங்களில் வாவிக்கரைக்கான எல்லையிடல் தொடர்பாக காணி உத்திகோகத்தரின் உதவியுடன் மேற்கொள்ளுமாறே அரசாங்க அதிபர் பணித்துள்ளார். தவிர எந்தவிதமான அனுமதிகளையும் அவர் மேற்கொள்ளவில்லை. (இணைக்கப்பட்ட 06.08.2016 திகதிய கடிதம் மூலம்)

அதே நேரத்தில் கடந்த ஜுன் மாதம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட வாவிக் கரை எல்லை கட்டையிடல் திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய இந்த எல்லையிடல் நடடிவக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.