
சிறந்த இளம் தலைவர்களை உருவாக்குவதோடு நாட்டின் அபிவிருத்திக்கு இளைஞர்களின் பங்களிப்பை பெற்றுக் கொடுப்பது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
அதற்க்காக 100 இளைஞர் யுவதிகளுக்கு வினைத்திறன் மிக்க தீர்மானம் எடுத்தல், திட்டமிடல் என்பவற்றுக்கான பயிற்சிகளும் செயல் முறை வழிகாட்டல்களும் துறை சார்ந்த நிபுணத்துவம் உள்ள வளதாரிகளால் வழங்கப்படவுள்ளது. எனவும் மூன்று நாட்கள் வதிவிடமாக இந்த முகாம் இடம் பெறவுள்ளதாக இளைஞர் சேவை அலுவலரினால் மேலும் கருத்து தெரிவிக்கப்பட்டது.