மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள சிறுவர் பூங்கா ஆபத்தானதா???

மட்டக்களப்பு கல்லடி புதிய பாலத்துக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய மீன் இசை சிறுவர் பூங்கா பாதுகப்பற்றதாகவும் முறையான திட்டமிடலின்றியும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் பலர் குறை கூறுகின்றனர்.

சிறுவர்களுக்கான பொழுது போக்கு விளையாட்டு முற்றமாக இந்த சிறுவர் பூங்கா அமையப் பெற்றிருந்தாலும் சில குறைபாடுகள் பாரிய உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கின்றதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

சிறுவர் பூங்கா மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. வாகன போக்குவரத்து அதிகம் நடைபெறுகின்ற வீதி. சிறுவர் பூங்காவிற்கான பாதுகாப்பு வேலியோ தடுப்புச் சுவரோ இன்மை சிறுவர்களின் விளையாட்டு நேர கவனயீனமான முறையில் வீதியை கடக்க முற்பட்டால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

அதே வேளை வீதியால் பயணிக்கும் வாகனங்கள் சில நேரங்களில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சிறுவர் பூங்காவிற்குள் நுளைவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

 ஆழமான மட்டக்களப்பு வாவி அருகில் இருப்பதும் ஆபத்துக்களை ஏற்படுத்த கூடிய வாய்ப்புக்களோடுதான் நிலைமை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குறை கூறுகின்றனர்.

எது எவ்வாறு இருந்த போதும் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்கும் போதும் எதிர் காலத்தையும் இது போன்ற விடயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும், என்றும் விரைவாக குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு இழப்புக்கள் ஏற்படுவதற்கு முன்பாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.