துறைநீலாவணை தெற்கு ,வடக்கு கிராமங்களில் சுயதொழில் குழுக்களின் மாபெரும் வியாபார சந்தை

(லியோன்)

துறைநீலாவணை  தெற்கு – 1  ,தெற்கு ,வடக்கு  ,கிராமங்கள் இணைந்து நடாத்தும் மாபெரும் வியாபார சந்தையும் களியாட்ட நிகழ்வும் துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் (07) ஆரம்பித்து வைக்கப்பட்டது ..


துறைநீலாவணை கிராமத்தில் சமூக பொருளாதார அபிவிருத்தியும் , பாதுகாப்பற்ற புலம் பெயர்தலை கட்டுப்படுத்தல் என்ற திட்டத்திற்கு அமைவாக அம்கோர் நிறுவனம் இக் கிராமங்களில் உள்ள 1100 குடும்பங்களில் 286  குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு 29 சுய தொழில் குழுக்கள் அமைக்கப்பட்டு வறுமையில் இருந்த பெண்களை ஊக்குவிக்கும் முகமாக வாழ்வாதார திட்டத்தை அறிமுகப்படுத்தி  செயல்படுத்தப்பட்டு வருகின்றது .

இச் செயல் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மையமாக கொண்டு குழு முறையிலான வாராந்த சேமிப்பு கிராமங்களில் இனங்காணப்பட்ட பிரச்சினைகள் ,, சுழற்சி முறையிலான கடன்திட்டம்  போன்ற பல்வேறு பட்ட செயல்திட்டங்களை நடைமுறை படுத்தப்படுகின்றது

இதற்கு அமைவாக   துறைநீலாவணை  தெற்கு – 1  ,தெற்கு ,வடக்கு  ,கிராமங்களின் சுயதொழில் குழுக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் அவர்களின்  உற்பத்தி பொருட்களை  விற்பனை செய்யும் மாபெரும் வியாபார சந்தையும் இதனுடன் இணைந்ததாக களியாட்ட நிகழ்வும் துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பட்டிருப்பு  வலயக்கல்வி பணிப்பாளர்  திருமதி  என் . புள்ளனாயகம் , துறைநீலாவணை  தெற்கு – 1  கிராம சேவை உத்தியோகத்தர் டி . கோகுலராஜ் , துறைநீலாவணை  வடக்கு  – 1  1  கிராம சேவை உத்தியோகத்தர் கனகசபை  , மட்டக்களப்பு அம்கோர் நிறுவன திட்ட முகாமையாளர் டி .சிவயோகராஜன் ,நிறுவன செயல்திட்ட உத்தியோகத்தர்  திருமதி சத்தியா விக்டர்  மற்றும் அம்கோர்  நிறுவன உத்தியோகத்தர்கள்,  , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பொது அமைப்புகளின் அங்கத்தவர்கள் , கிராம வாழ்வாதாரக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இந்த  வியாபார சந்தை  07 ஆம் மற்றும்  08  ஆம்  திகதிகளில் இரண்டு நாட்களாக  நடைபெற்றமை   குறிப்பிடத்தக்கது .