மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்.



 தேசியக் கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் மேற்பார்வை    மற்றும் வழிகாட்டலின் கீழ் செயற்படுகின்ற தேசிய இளைஞர் சேவைகள்  மன்றத்தின் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றமானது மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பிரதேச செயலகப் பிரிவிற்கு ஒன்று வீதம் பதினான்கு (14 )  இளைஞர் முகாம் வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளது.


மாவட்டம் பூராகவும் சுமார் 1400 இளைஞர் யுவதிகளை இந்த வேலைத்திட்டத்தில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதோடு துறை சார் நிபுணத்துவம் கொண்ட வளதாரிகளால் இளைஞர் யுவதிகள் பயிற்றுவிக்கப்படவுள்ளனர்.

இளைஞர் யுவதிகளிடையே அன்னியோன்னிய
நட்பினை மேம்படுத்துதல், இளமையில்
தலைமைத்துவ பண்புகள் மற்றும் ஆக்கத்திறனை
மேம்படுத்திக் கொள்வதற்க்காக சந்தர்ப்பத்தினை
பெற்றுக் கொடுத்தல் இளைஞர் கழக
செயற்பாட்டினை வலுவாக்குதல் எனும்
இலக்கினை அடையும் பொருட்டு  இந்த தலைமைத்துவ இளைஞர் முகாமானது முன்னெடுக்கப்பவுள்ளது.

மூன்று நாள் வதிவிடமாக நடைபெறவுள்ள இந்த முகாமானது முற்றிலும் இலவசமாகவே (வெள்ளி, சனி,ஞாயிறுதினங்களில்) நடாத்தப்படுகிறது.

ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி மற்றும் குறித்த பிரதேசத்தினுடைய பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் இந்த வேலைத்திட்டங்களுக்கு பொறுப்பாக செயற்படுவார்கள். என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜனாப் MLMN. நைறுஸ் தெரிவித்தார்.

கலந்து கொள்ள விரும்பும் இளைஞர், யுவதிகள் உங்கள் பிரதேச செயலகங்களுக்கு சென்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரியை தொடர்பு கொண்டு பங்கு பற்றலுக்காக பதிவு செய்து கொள்ள முடியும்.

அல்லது உங்கள் சுய விபரக் கோவையை  27.10.2016ம் திகதிக்கு முன்பு நேரடியாகவோ தபால் மூலமாகவோ
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்,
மாவட்ட காரியாலயம், மட்டக்களப்பு எனும் முகவரிக்கு  அனுப்பி வைக்க முடியும்.