வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் பிரதேச இளைஞர் முகாம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசியக் கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை  அமைச்சின் மேற்பார்வை    மற்றும் வழிகாட்டலின் கீழ் செயற்படுகின்ற தேசிய இளைஞர் சேவைகள்  மன்றத்தின் , மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற ஒருங்கிணைப்பில் கோரளைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இளைஞர், யுவதிகளுக்கான  மூன்று நாள் தலைமைத்துவ வதிவிட பிரதேச இளைஞர் முகாம் வாழைச்சேனை  இந்துக் கல்லூரியில் 21.10,2016 வெள்ளிக் கிழமை பி.ப 03.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இளைஞர் யுவதிகளிடையே அன்னியோன்னிய நட்பினை மேம்படுத்துதல், இளமையில் தலைமைத்துவ பண்புகள் மற்றும் ஆக்கத்திறனை மேம்படுத்திக் கொள்வதற்க்காக சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொடுத்தல் இளைஞர் கழக செயற்பாட்டினை வலுவாக்குதல் எனும் இலக்கினை அடையும் பொருட்டு இந்த இளைஞர் முகாம் நடைபெறுகின்றது.

இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கோரளைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி நிருபா பிருந்தன், மாநகர உதவி ஆணையாளர் திரு என். தனஞ்சயன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி யேசுதாஸ் கலாரானி, திருமதி.நிசாந்தி அருள்மொழி கோரளைப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி திரு சீ.நடேசகுமார் கோரளைப்பற்று பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் செல்வன் ரி.சசிகுமார்ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இவ் இளைஞர் முகாமிற்கு அதிகளவான இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் பங்குபற்றியதுடன் எதிர் வரும் 23.10.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 02.30 மணிக்கு இந்த முகாம் நிறைவு செய்யப்படவுள்ளது