வர்த்தகர்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

 (லியோன்)

சட்டத்திற்கு முரணான வகையில் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை  மீறியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நீதவான் உத்தரவு.
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமான முறையில் அதிக கூடிய விலையில்  பொருட்களை விற்பனை செய்தமை ,காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமல் பொருட்களை விற்பனை செய்தமை ஆகிய குற்றசாட்டுக்களுக்கு உள்ளான  15  வர்த்தகர்களுக்கும் , போக்குவரத்து விதிமுறைகளை   மீறிய 21  பேருக்கு  எதிராக மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்றில் வழக்கு  தாக்கல் செய்யப்படதை தொடர்ந்து  குறித்த நபர்கள்  இன்று மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர் ,

குறித்த வர்த்தகர்களை  விசாரணை செய்த மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா குற்றசாட்டுகளுக்கு உள்ளான 15  வர்த்தகர்களுக்கும் சட்டத்திற்கு விரோதமான முறையில் பொருட்களை விற்பனை செய்தமைக்காக  தண்டப்பணமாக  நீதிமன்றத்திற்கு (70,000/-) எழுபது ஆயிரம்  ரூபாவை  செலுத்துமாறு தீர்பளித்தார் .


இதேவேளை போக்குவரத்து விதிமுறைகளை  மீறியோருக்கு எதிரா தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்  மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமை , மேலதிகமாக வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றமை , அதேவேளை அவர்களுக்கு காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்  21  பேருக்கு   எதிராக  நீதிமன்றத்திற்கு (125,000/-)  ஒரு இலட்சத்தி இருபந்தைந்தாயிரம் ரூபா  தண்டப்பணமாக செலுத்துமாறும் , மதுபோதையில் வாகனத்தை செலுத்தியவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துமாறும் மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவு  பிறப்பித்துள்ளார்