உலக வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்

(லியோன்)

உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம் “ எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்     நடைபெற்றது .


உலக  வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அலுவல்கள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .பி எஸ் .எம் .சார்ள்ஸ் தலைமையில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக  சமுர்த்தி அலுவலக பிரிவில் நடைபெற்றது .

அலுவலக உத்தியோகத்தர்களும்   சமூக  பணியினை மேற்கொள்ளவேண்டும் என்ற நோக்காக கொண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன்  இணைந்து  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இரத்ததான முகாம் இன்று காலை 09.00மணி முதல் பிற்பகல் 03.00மணி வரை நடைபெற்றது .


இந்த இரத்ததான முகாமில்   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் செல்வி . இவாஞ்சலி ,வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் . கிரிதரன் ,மாவட்ட  திவிநெகும திணைக்கள பணிப்பாளர் பி .குணரட்ணம் , மாவட்ட திவிநெகும முகாமையாளர் .ஜெ. எஸ் .மனோகிதராஜ்    , திவிநெகும திணைக்கள  உத்தியோகத்தர்கள் , திவிநெகும வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி   உத்தியோகத்தர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.