கோட்டமுனை விளையாட்டு கழகம் 2016 ஆம் ஆண்டுக்கான வெற்றி கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது

  (லியோன்)

மட்டக்களப்பு கோட்டமுனை  மற்றும் மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு  கழகங்களுக்கிடையில் நடத்தப்பட்ட  50 ஓவர்கள் கொண்ட கடினபந்து  கிரிகெட் சுற்று போட்டியில் கோட்டமுனை விளையாட்டு கழகம் ஜம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன் 2016 ஆம் ஆண்டுக்கான  வெற்றி கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது.


மட்டக்களப்பு கோட்டமுனை  மற்றும் சிவானந்தா இரு கழகங்களும் தங்களிடையே இருக்கும் உறவை நட்பு ரீதியாக எப்பொழுதும்  ஒரு ஒன்றிப்பான கழகங்களாக செயற்பட்டு வருகின்றது.

இந்த நட்பின் செயற்பாடாகவே கடந்த பத்து வருடங்களாக சிவானந்தா விளையாட்டு கழகமும் கோட்டைமுனை விளையாட்டு கழகமும், சினேகபூர்வமான ஒரு கடின பந்து கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்து வருடந்தோரும் மிக சிறப்பாக நடாத்தி வருகின்றது.

இந்த பிரபல விளையாட்டு கழகங்களுக்கிடையில்   50  ஓவர்கள் கொண்ட  டினபந்து  கிரிகெட் சுற்று போட்டிகள் இரண்டு நாட்களாக நடத்தப்படுகின்றது .

இந்த இரண்டு  நாள் போட்டியானது (15.10.2016)  சனி மற்றும் (16.10.2016) ஞாயிறு  இரு தினங்கள் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா பாடசாலை மைதானத்தில்   நடைபெற்றது   

முதல் நாள் சனிக்கிழமை  நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிவானந்தா விளையாட்டு கழகம் 43 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 130  . ஓட்டங்களை பெற்றுக்கொண்டது . பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோட்டமுனை விளையாட்டு கழகம் 26  ஓவர்களில்  3 விக்கட்டுக்களை இழந்து 131  . ஓட்டங்களை பெற்று முதல் நாள் போட்டியில் கோட்டமுனை விளையாட்டு கழகம் வெற்றி பெற்றது . 

இரண்டாம் நாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது . இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிவானந்தா விளையாட்டு கழகம் 46  ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 192   . ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோட்டமுனை விளையாட்டு கழகம் 46   ஓவர்களில்  7  விக்கட்டுக்களை இழந்து 193  . ஓட்டங்களை பெற்று  இரண்டாம் நாள் போட்டியிலும்  கோட்டமுனை விளையாட்டு கழகம் வெற்றி பெற்றது . 

இதன் அடிப்படையில் இந்த இரண்டு கழகங்களுக்கிடையில் நடத்தப்படுகின்ற இரண்டு நாள் கடினபந்து கிரிகெட்  போட்டியில்  இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற கோட்டமுனை விளையாட்டு கழகம்   ஜம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன் 2016 ஆம் ஆண்டுக்கான வெற்றிக்  கிண்ணத்தையும்  சுவிகரித்துக்கொண்டது


இடம்பெற்ற இறுதி நிகழ்வில்  பிரதம அதிதிகளாக   கிழக்குமாகாண சபை பிரதி தவிசாளர் இந்திரகுமார்  பிரசன்னா , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கருணாகரன் (ஜனா) , மட்டக்களப்பு இந்து கல்லூரி அதிபர்  அருள்பிரகாசம் ,மட்டக்களப்பு மாவட்ட கிரிகெட் கட்டுப்பாட்டு சபை தலைவர்  எஸ் ரஞ்சன் , கிரிகெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் . பிரதீபன் ,சிவானந்தா  விளையாட்டு கழக தலைவர் . கே .முரளிதரன் , கோட்டமுனை விளையாட்டு கழக தலைவர் டி . தர்மேந்திரன்  மற்றும்  இரு விளையாட்டு  கழகங்களின் உறுப்பினர்கள்  கலந்துகொண்டனர்.