மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு

சர்வதேச ஆசிரியர் தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. வளமுள்ள வாழ்வினை மாணவர்களுக்கு வழங்க அர்ப்பணம் செய்யும் மெழுகுவர்த்திகளை கௌரவிக்கும் நாளாக இது அனுஸ்டிக்கப்படுகின்றது.

சர்வதேச ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலையான மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

பு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இந்த ஆசிரியர் தின நிகழ்வில் இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஆசிரியர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச்செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

பழைய மாணவர் சங்க தலைவரும் ஜேசுசபை துறவிகள் பாடசாலையின் மேலாளருமான அருட்தந்தை போல்சற்குணநாயகம் அடிகளார் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

பாடசாலைக்கு ஊர்வலம் சென்றடைந்ததும் அங்கு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வின்போது குரு பிரதீபா விருதுகள்பெற்றுக்கொண்ட பாடசாலை அதிபர் வெஸ்லியோ வாஸ்,மற்றும் வனிதா செல்வேந்திரன் அகியோர் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.