கிழக்குமாகாண வர்த்தக கைத்தொழில் ,விவசாய சம்மேளனம் ஒன்றிணைக்கும் கலந்துரையாடல்

(லியோன்)


கிழக்குமாகாண வர்த்தக கைத்தொழில் ,விவசாய சம்மேளனம் அமைத்தல் தொடர்பான மூன்று மாவட்டங்களின்  அங்கத்தவர்களுடனான கலந்துரையாடல்  மட்டக்களப்பில் நடைபெற்றது .


மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் , விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சம்மேளன தலைவர் கே .அகிலன் தலைமையில் ஆசிய பசுபிக்  அனர்த்த முகாமைத்துவ அமைப்பின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு ,அம்பாறை ,திருகோணமலை  ஆகிய மூன்று  மாவட்டங்களின் வர்த்தக கைத்தொழில் , விவசாய சம்மேளனங்களை ஒன்றிணைக்கும்  கலந்துரையாடல்  மட்டக்களப்பு நடைபெற்றது .

இதன்  போது அமைக்கப்படவுள்ள கிழக்கு மாகாண  வர்த்தக ,கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின்  யாப்பு அறிக்கைகள் ,எதிர்கால வேலைதிட்டத்தின்   பொதுமக்களுக்கு  வழங்கப்படும்  சமூக செயல்திட்டங்கள் தொடர்பாகவும் , வர்த்தகம் ,கைத்தொழில் ,விவசாயம் ஆகியவற்றின் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாமாங்கம் மாவட்ட கைத்தொழில் விவசாய சம்மேளன கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது .


நடைபெற்ற   கிழக்குமாகாண வர்த்தக கைத்தொழில் ,விவசாய சம்மேளன கலந்துரையாடல் நிகழ்வில்   கிழக்கு மாகாண கைத்தொழில் ,விவசாய சம்மேளன  இணைப்பாளர் மொகமட் சயிபுல்லா ,CHA  மாகான திட்ட இணைப்பாளர் எஸ் .பி .சில்வஸ்டர் , CHA மாவட்ட உத்தியோகத்தர் எம் எம் . ஹகமட்,   மட்டக்களப்பு ,அம்பாறை , திருகோணமலை  மாவட்ட வர்த்தக ,கைத்தொழில் ,விவசாய சம்மேளன  தலைவர்கள்  மாவட்ட  சம்மேளன உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்