மட்டக்களப்பு,பெரியகல்லாறு ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலய திருச்சடங்கு ஆரம்பம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு நேற்று சனிக்கிழமை மாலை கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.

பழமையானதும் அற்புதங்கள் நிறைந்ததுமான இந்த ஆலயத்தின் திருச்சடங்கானது கிழக்கு மாகாணத்தின் தமிழர்களின் பண்டைய வழிபாட்டு முறையினையும் பண்பாட்டினையும் எடுத்துக்காட்டும் வகையில் நடாத்தப்பட்டுவருகின்றது.

ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கையொட்டி நேற்று பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து அம்பாள் கொண்டுசெல்லும் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணிய அறநெறிப்பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகளுடன் அம்பாள் கொண்டுசெல்லும் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஆலயத்திற்கு அம்பாள் சென்றடைந்ததும் அங்கு விசேட பூஜைகள் நடைபெற்று திருக்கதவு திறக்கும் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஐந்து தினங்கள் நடைபெறும் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கில் நாளை திங்கட்கிழமை இரவு அம்பாள் ஊர்காவல் சடங்கு நடைபெறவுள்ளதுடன் நாளை செவ்வாய்க்கிழமை காலை சக்தி மகா யாகமும் பிற்பகல் நோற்பு கட்டுதல் நிகழ்வும் மாலை கடற்குளிப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது.

நாளை மறுதினம் புதன்கிழமை ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.இந்த தீமிதிப்பு உற்சத்தில் ஆயிரக்கானோர் கலந்துகொள்ளகின்றமை குறிப்பிடத்தக்கது.