சிறுவர்களை பொருளவில் மதிக்கப்படுகின்றார்கள் .அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை

(லியோன்)

எமது சிறுவர்களுக்கு பல்வேறுபட்ட உரிமைகள் காணப்படுகின்றன ,   அந்த உரிமைகளை பெற்று கொடுப்பதும், அவர்களை பாதுகாத்து அவர்களுக்கு மகிழ்ச்சிகரமான சூழலை ஏற்படுத்தி கொடுப்பதும் ,பெரியோர்களாகிய எமது பொறுப்பாகும் என ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக  உதவி பிரதேச செயலாளர்  திருமதி . நவரூப ரஞ்சனி முகுந்தன்  தெரிவித்தார் .


சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் “ மகிழ்வான சிறுவர் உலகை காப்பதற்காக நாம் கைகொடுப்போம் “  “ சந்ததியை உருவாக்கிய சந்ததிக்காக “ எனும் தொனிப்பொருளில் சிறப்பு நிகழ்வுகள் இன்று இடம்பெற்று வருகின்றது .

இதற்கு அமைய சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக சிறப்பாக   நடைபெற்று வருகின்றது .

இன்று மட்டக்களப்பு  ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு சமூக சேவைக் கிளை ஏற்பாட்டில்  சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவு , வேல்ட் விசன் , சி .டி .டி . எப்  ஆகிய நிறுவன அனுசரணையில்  பிரதேச செயலாளர் உ .உதயஸ்ரீதர் தலைமயில் சிறப்பு நிகழ்வுகள் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது . 

இந்நிகழ்வில்   ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட கட்டுரை , பேச்சி ,விவாதம் ,சித்திரம் ஆகிய போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும்  “சவால்களுக்கு சாதனைகளும்” எனும் நூல் வெளியிடும் , மாணவர்களின் சிறுவர் தின சிறப்பு நிகழ்வுகளும் நடைபெற்றது .

இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று செங்கலடி உதவி பிரதேச செயலாளர்  திருமதி . முகுந்தன் , ஏறாவூர் பற்று  சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ. சிறிநாத் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ் . சந்திரசேகரம் . ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக மனித வலு மேம்பாட்டு உத்தியோகத்தர் கொலின்,  சமூக சேவை உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் . பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள் , முதியோர் சங்க உறுப்பினர்கள் , பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்

இந்நிகழ்வில் உரையாற்றிய  உதவி பிரதேச செயலாளர்  தெரிவிக்கையில் எமது சிறுவர்களுக்கு பல்வேறுபட்ட உரிமைகள் காணப்படுகின்றன , அந்த அந்த உரிமைகளை பெற்று கொடுப்பதும், அவர்களை பாதுகாத்து அவர்களுக்கு மகிழ்ச்சிகரமான சூழலை ஏற்படுத்தி கொடுப்பதும் ,பெரியோர்களாகிய எமது பொறுப்பாகும் . நாம் நினைக்கலாம் அவர்களின் பெற்றோர்கள் மட்டும் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்று அவ்வாறு இல்லாது சமூகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு பெரியவர்களின் கடமையாக காணப்படுகின்றது .

இன்று அநேக குடும்பங்களில் சிறுவர்களை பொருளவில் மதிக்கப்படுகின்றார்கள் .அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை , அவர்களின் உரிமைகளை பெற்றுகொடுப்பதில்லை . ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மட்டும் பிள்ளைகளில் நலனில் அக்கறை கொள்வது என்பது இயலாதவிடயம் .


எனவே அவர்களின் கடமைகளையும் ,பொறுப்புகளையும் நிறைவேற்றுவதன் ஊடாகவே அவர்களின் உரிமைகளை பெற்றுக்கொல்லாம் எனவே பெரியவர்களே இவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என உதவி பிரதேச செயலாளர் தெரிவித்துக்கொண்டார்