தேசிய இலக்கிய விழா- 2016 மட்டக்களப்பில் நடைபெற்றது

(லியோன்)

தமிழர்களுடைய கலையும் ,கலாசாரமும் , விளும்பியங்களும் இன்று செம்மையாக பேணப்படக்கூடிய சூழலளிலே இல்லாமல் அவை மாற்றமடைந்து கொண்டு செல்கின்ற அல்லது மறைந்து போகின்ற நிலையிலே இருப்பது என்பது ஒரு துரதிஷ்ட விடயமாகும் என  தேசிய இலக்கிய விழா நிகழ்வின் போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தெரிவித்தார்.


மட்டக்களப்பு  மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் 2016  தேசிய இலக்கிய விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி எம் .சாலினி ஒழுங்கமைப்பில்  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் (30)  வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
 இந்நிகழ்வில் நர்த்தன பவனம் நாட்டியாலய மாணவர்களின் கலை கலாசார   நிகழ்வுகள் இடம்பெற்றது .

நடைபெற்ற தேசிய இலக்கிய விழாவில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கலாசார இலக்கிய போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற  மாணவர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் கலாசார உத்தியோகத்தர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக  நிர்வாக உத்தியோகத்தர்  திருமதி . சசிதரன் , மண்முனை வடக்கு பிரதேச செயலக கணக்காளர்  ஜெகதிஸ்வரன் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் , பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர் .

இந்நிகழ்வின் போது உரையாற்றிய பிரதேச செயலாளர் தெரிவிக்கையில் ஒரு இனத்தினுடைய இருப்பை அதனுடைய வரலாற்றினை அதனுடைய காத்திர தன்மையினை அடையாள படுத்துகின்ற விடயங்களாக கலையும் ,கலாசாரமும் அவை சார்ந்த வடிவங்களும் இருக்கின்றது என்பது எவரும் மறுக்க முடியாத விடயமாகும் .

ஆனால் தமிழர்களுடைய கலையும் ,கலாசாரமும் , விளும்பியங்களும் இன்று செம்மையாக பேணப்படக்கூடிய சூழலளிலே இல்லாமல் அவை மாற்றமடைந்து கொண்டு செல்கின்ற அல்லது மறைந்து போகின்ற நிலையிலே இருப்பது என்பது ஒரு துரதிஷ்ட விடயமாகும் .

அந்த வேளையில் தான் இத்தகைய நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்வதன் ஊடாக எதிர்கால சந்ததியினருக்கு தமிழர்களுடைய கலை கலாசாரம் என்ன என்பதனை தெளிவுபடுத்துகின்ற விடயமாக நாங்கள் இந்த நிகழ்வுகளை ஒழுங்கு செய்கின்றோம் .


அதை ஒட்டியதாகவே இந்த தேசிய கலை இலக்கிய விழா பிரதேச மட்டத்திலே  நடாத்துகின்ற பொழுது  குறிப்பாக மாணவர்கள்  மத்தியிலே கிராமிய பாடல் , கிராமிய நடனம் ,நாடகம் ,நாட்டுக்கூத்து போன்ற வடிவங்களை போட்டியாக வைத்து அவர்களுக்கு இன்று பரிசில்களும் வழங்கப்படுகின்றது .

இதை ஏன் இவ்வாறு செய்கின்றோம் என்றால் இன்றைய மாணவ சமூகம் அல்லது இளம் சமூகம் கலை கலாசார விடயங்களிலே ஈடுபடக்கூடிய சந்தர்ப்பம் குறைவடைந்து செல்வதும் , அதில் உள்ள  ஈடுபாடு குறைவது என்பதன் காரணமாகும்

.ஆகவே மாணவர்கள் தங்களுடைய கல்வி நடவடிக்கையுடன் இணைந்து இத்தகைய செயல்பாடுகளிலே ஈடுபட வேண்டும் ,அதற்கு ஆசிரியர்களும் ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும் .

அதே போன்று ஏனையோரும் எங்களுடைய பாரம்பரியத்தை பேணுவதற்காக ,கலை பேணுவதற்காக எங்களால் முடிந்த செயற்பாடுகளை செய்யவேண்டும் .
ஏனென்றால் ஒரு இனம் இருந்தது அது இவ்வாறு வாழ்ந்தது  இத்தகைய கலைகளை பேணியது என்பதனை எதிர்கால சந்ததி தெரிந்து கொண்டாள் தான் அவர்கள் அடுத்த சந்ததிக்கு எடுத்து செல்வார்கள் .

ஆகவே ஒவ்வொருவரும் இவ்வாறான செயல்பாடுகளுக்கு  ஒத்துழைப்பு






























வழங்க வேண்டும் என தெரிவித்துக்கொண்டார்.


  .